Malayagam
Home » பொது இடத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளான பிரபல நடிகை

பொது இடத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளான பிரபல நடிகை

பிரபல நடிகை

பிரபல சினிமா புரமோஷனுக்குச் சென்ற நடிகைகள் பொதுமக்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தங்கள் சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோட்டிலுள்ள பிரபல மாலில் செவ்வாய்க்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்த வீடியோக்கள் இணையங்களில் பரவி வைரலானதை அடித்து தொலைக்காட்சிகளிலும் இதுகுறித்த செய்திகள் வெளியானது.

பாதிக்கப்பட்ட நடிகை தனது இன்ஸ்டாகிராம் பதிவில், ‘’கோழிக்கோடு நான் அதிகம் நேசிக்கக்கூடிய இடம். ஆனால் இன்றிரவு நிகழ்ச்சி முடிந்து திரும்பும்போது, கூட்டத்திலிருந்த நபர் ஒருவர் என்னை பிடித்தார். இதை சொல்வதற்கே அருவருப்பாக இருக்கிறது.

Also Read : விக்ரம் மகனுக்கு ஜோடியாகும் வாரிசு: யார் மகள்னு தெரியுமா?

நம்மை சுற்றியுள்ள மக்கள் மிகவும் விரக்தியில் உள்ளனரா? புரமோஷனுக்காக நிறைய இடங்களுக்கு சென்றிருக்கிறோம். ஆனால் இதுபோன்ற மோசமான அனுபவம் எங்கும் ஏற்பட்டதில்லை.

என்னுடன் வந்தவருக்கும் இதேபோன்ற அனுபவம் கிடைத்திருக்கிறது. அவர் அதற்கு ரியாக்ட் செய்துவிட்டார். ஆனால் அந்த சூழ்நிலையில் நான் சில நொடிகள் அசைவற்று போனதால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை’’ என்று கூறியுள்ளார்.

கூட்டத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மற்றொரு நடிகையும் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். மாலில் கூட்டம் அதிகமாக இருந்தது.

பாதுகாப்பு பணியாளர்கள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். ஒரு நபர் எனது சக நடிகையிடம் தவறாக நடந்துகொண்டார். ஆனால் அவரால் அந்த இடத்தில் ரியாக்ட் செய்ய முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ‘’அதன்பிறகு எனக்கும் அதேபோன்றதொரு அனுபவம் ஏற்பட்டது. ஆனால் நான் ரியாக்ட் செய்துவிட்டேன்… இதுபோன்ற தேவையற்ற அதிர்ச்சியை யாரும் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கக்கூடாது என்று நான் விரும்புகிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், நடிகைகளை துன்புறுத்தியவரக்ள் யார் என அடையாளம் காண முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

Most discussed