Mon, Dec5, 2022

#Trending

நயன்தாரா படத்தில் சிஎஸ்கே வீரரின் சகோதரி: ரசிகர்கள் கொண்டாட்டம்!

விக்னேஷ் சிவன், நயன்தாராவுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த பேனரின் கீழ் பல சுவாரஸ்யமான படங்களை தயாரித்து வருகின்றனர்.

இவர்களது தயாரிப்பில் உருவான ‘கூழாங்கல்’ படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கபட்டுள்ளது. மேலும், நிறைய விருதுகளையும் பெற்று வருகிறது.

இந்நிலையில் அடுத்ததாக Walking/Talking Strawberry Icecream என்கிற புதிய படத்தையும் தயாரிக்க உள்ளார் விக்னேஷ் சிவன். இது இளைஞர்களின் மனம் கவரும் காதல் படமாக உருவாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இப்படத்தில் ‘சூரரைப்போற்று’ படத்தில் ‘சே’ என்ற கதாபாத்திரத்தில் நடித்த கிருஷ்ண குமார் கதாநாயகனாக நடிக்க உள்ளார். விநாயக் என்கிற புதுமுக இயக்குனர் இப்படத்தை இயக்க உள்ளார்.

இந்தப்படத்தில் சிஸ்கே அணி வீரரான தீபக் சஹாரின் சகோதரி மால்தி சஹார் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். சிஸ்கே அணி விளையாடும் போட்டிகளை காண மைதானத்திற்கு வரும் மால்தி சஹார்ரை பார்க்கவே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அதுமட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராமில் இவர் பதிவிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாவது வழக்கம்.

#WalkingTalkingStrawberryIcecreamன் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அவர்களின் தயாரிப்பில் நடிப்பதில் மகிழ்ச்சி. இந்தப்படம் அற்புதமாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்!” என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக இந்தப்படத்தில் பாடகர் ஜோனிடா காந்தி நடிப்பதாக இருந்தது. அதன்பின் தற்போது மால்தி சஹார் நடிக்க இருக்கிறார். விக்னேஷ் சிவன் தற்போது விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

#Celebrities