Homeசெய்திகள்கணவனை பிரிந்த பெண்ணுடன் பலமுறை உல்லாசம்.. 6 முறை கருகலைப்பு

கணவனை பிரிந்த பெண்ணுடன் பலமுறை உல்லாசம்.. 6 முறை கருகலைப்பு

கணவனைப் பிரிந்து இருந்த பெண் கடை உரிமையாளரால் கற்பழித்து கருக்கலைப்பு செய்யப்பட்டு வந்த நிலையில் அந்தப் பெண் தீக்குளித்துள்ளார். இது கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காதலிப்பதாக கூறி கற்பழிப்பது. காதலிக்க மறுக்கும் பெண்களின் முகத்தில் ஆசிட் வீசுவது, திருமணம் செய்துகொண்டு வரதட்சணைக் கேட்டுக் கொடுமைப்படுத்துவது என எண்ணற்ற வகைகளில் பெண்கள் கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர்.

- Advertisement -

இங்கு கணவனைப் பிரிந்து இருந்த பெண் கடை உரிமையாளரால் கற்பழிக்கப்பட்டு ஆறு முறை கருக்கலைப்பு செய்யப்பட்ட நிலையில் அந்தப் பெண் இன்று தீக் குளித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கர்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மீனா (37) பெயர் மாற்றப்பட்டுள்ளது.

கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கு திருமணம் நடைபெற்றது, கருத்துவேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார்.

- Advertisement -

அங்கிருந்த சிமெண்ட் டைல்ஸ் விற்பனை செய்யும் கடையில் வேலை செய்து வந்தார். நிலையில் கோவை ஆர்.எஸ் புரத்தில் உள்ள தனது கடை உரிமையாளர் வீட்டிற்கு வந்து பின் அங்கு திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

அப்போது அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடுவந்து மீனாவை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆரம்பத்தில் கடையில் வேலை செய்யும் பெண் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் தனது கடை உரிமையாளரிடம் பணம் கேட்டு வந்ததாகவும் ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்ததால் தீக்குளித்ததாகவும் கூறப்பட்டது.

ஆனால் அந்த பெண்ணு ஏற்கனவே இது குறித்து கடிதம், வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் கட்ந்த 11 ஆண்டுகளாக விநாயகா செராமிக்ஸ் சிமெண்ட் டைல்ஸ் கடையில் வேலை வேலை செய்து வருகிறேன்.

கடை உரிமையாளர் நான் கணவரை பிரிந்து இருப்பதை பயன்படுத்தி என்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்தார். அடிக்கடி எனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்து வந்தார். இது அவரது மனைவிக்கும் தெரியும், அவர்களுக்கு குழந்தை இல்லை எனவே அடிக்கடி என்னுடன் உல்லாசத்தில் ஈடுபட்டு வந்தார்.

இது குறித்து அவரது உறவினர்களிடம் கூறுகையில் என்னை மிரட்டினார். ஏற்கனவே அவர் 6 முறை கருக்கலைப்பு செய்துள்ளார். என்னைப் போன்ற அப்பாவி பெண்களுக்கு இதுபோன்ற நிலைமை ஏற்படக்கூடாது.

எனது மரணத்திற்கு கடை உரிமையாளர் நவநீதன் மற்றும் அவரது குடும்பத்தினர் தான் காரணம் என அவர் கூறியுள்ளார். என்னைப்போல் அப்பாவி பெண்கள் பாதிக்கப்படக்கூடாது இப்படி பாதிக்கப்படுபவர்களில் கடை இறப்பு நானாகத்தான் இருக்க வேண்டும்.

எனக்கு நிச்சயம் நியாயம் கிடைக்க வேண்டும், அவர் பொய் சொன்னால் கேட்காதீர்கள் இவ்வாறு அவர் கூறியுள்ளார். பாலியல் தொல்லை காரணமாக பெண் தீக்குளித்ததாக ஆர்எஸ் புரம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். தற்போது அந்த பெண் மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

RELATED ARTICLES

Most Popular