உலகின் பிரபல சமூகவலைத்தளமான பேஸ்புக் தன்னுடைய பெயரை மாற்றியுள்ளது. உலகில் இருக்கும் மக்களில் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் சமூகவலைத்தள ஆப்களில் பேஸ்புக்கும் ஒன்று.
இந்நிலையில், பேஸ்புக் அடுத்தகட்டமாக மெய்நிகர் ஆன்லைன் உலகமான மெட்டாவெர்ஸ் நோக்கி தன்னுடைய கவனத்தை திருப்பி வருவதாகவும், அதனை பிரதிபலிக்கும் வகையில், தன்னுடைய பெயரை மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
இதையடுத்து தற்போது பேஸ்புக்கின் பெயர் மாற்றப்பட்டுள்ளதாகவும், அதற்கு Meta என புதிதாக பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேஸ்புக் ஆண்டு கூட்டத்தில் பேசுகையில், சமூக பிரச்னைகளுடன் போராடி நிறைய கற்றுக் கொண்டோம், கற்றுக் கொண்ட அனைத்தையும் கொண்டு புதிய அத்தியாயத்தை உருவாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
ஆனால், அதே சமயம் தங்கள் ஆப்களும், அவற்றின் பிராண்டுகளும் மாறவில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.
Leave a Reply
View Comments