இந்தியாவை தோற்கடித்தால் திருமணம்
நடப்பு டி20 உலகக்கிண்ண தொடரில் இந்தியாவை தோற்கடித்தால் ஜிம்பாப்வே பையனை திருமணம் செய்து கொள்வேன் என பாகிஸ்தான் நடிகை சவால் விடுத்து உள்ளார்.
டி20 உலகக் கோப்பை போட்டியின் சூப்பர் 12 ஆட்டத்தில் இந்தியா ஜிம்பாப்வேயுடன் மோதுகிறது. இந்தப் போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.
இந்த நிலையில், பாகிஸ்தான் நடிகை செஹர் ஷின்வாரி வரவிருக்கும் போட்டி குறித்து டுவீட் செய்துள்ளார்,
ஜிம்பாப்வே இந்தியாவை தோற்கடித்தால், ‘ஜிம்பாப்வே பையனை’ திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டு உள்ள டுவிட்டில் ‘அடுத்த போட்டியில் ஜிம்பாப்வே அணி இந்தியாவை அற்புதமாக வீழ்த்தினால் நான் ஜிம்பாப்வே பையனை திருமணம் செய்து கொள்வேன் என டுவிட் செய்து உள்ளார். இந்த டுவீட் பல லைக்குகளையும் ரீடுவீட்களையும் பெற்றுள்ளது.
டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பிரபலமானவர் செஹர் ஷின்வாரி. அவரை இன்ஸ்டாகிராமில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் பின்தொடர்கிறார்கள்.
செஹர் ஷின்வாரி பாகிஸ்தானின் ஐதராபாத் நகரில் பிறந்தார். கோஹாட் பகுதியைச் சேர்ந்த ஷின்வாரி பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். 2014 ஆம் ஆண்டு ‘ஷேர் சாவா ஷேர்’ என்ற நகைச்சுவைத் தொடரின் மூலம் தனது நடிப்பைத் தொடங்கினார்.