பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்கள் அனைவரும் தங்கள் வாழ்வில் நடந்த முக்கிய சம்பவங்களை பற்றி கூறி வருகின்றனர். நேற்று ராபர்ட் மாஸ்டர் கண்ணீர் விட்டு பேசியது அனைவரையும் பரிதாபப்பட வைத்தது.
தற்போது 41 வயதாகும் ராபர்ட் சிறுவயதிலேயே போலியோவால் பாதிக்கப்பட்டு பிறகு அதிலிருந்து மீண்டதாக கூறினார். மேலும் இளமை காலத்தில் தான் செய்த தவறுகளை யாரும் சுட்டிக்காட்டாததால் தான் தற்போது யாரும் இல்லாமல் தனிமையில் வாடுவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
அதனால் இப்போது தன்னுடன் இருப்பவர்கள் தன்னுடைய குறைகளை சுட்டி காட்டினால் நான் மாறிக் கொள்வேன் என்றும் அவர் கூறினார்.
ஏனென்றால் யாருடைய பேச்சையும் கேட்காமல் வளர்ந்த ராபர்ட் பதினெட்டாவது வயதிலேயே ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டாராம். தன்னுடைய மனைவியும் ஒரு டான்ஸர் தான் என்று கூறிய ராபர்ட் தனக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும் கூறியுள்ளார் இது பலருக்கும் தெரியாத ஒரு விஷயம்.
அது மட்டுமல்லாமல் நான் படிக்கவில்லை என்ற காரணத்தால் என் மனைவி என்னை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு நபரை திருமணம் செய்து கொண்டார் என்றும் அவர் கூறி வருத்தப்பட்டார்.
அதனால் அவர் தன் குழந்தையை இரண்டு வயதிற்கு பிறகு பார்க்கவே இல்லையாம். இடையில் ஒரு முறை தன் முன்னாள் மனைவியை அவர் கணவருடன் சந்திக்க நேர்ந்த போது கூட தன் மகளுடன் அவரால் பேச முடியவில்லை.
அதற்கு அனுமதிக்காத அவருடைய முன்னாள் மனைவி தன் குழந்தையிடம் அங்கிளுக்கு ஹாய் சொல்லு என்று கூறினாராம். இவர்தான் தன் அப்பா என்று தெரியாத அந்த குழந்தையும் அவருக்கு ஹாய் அங்கிள் என்று கூறிவிட்டு சென்றதாம்.
இதைப் பற்றி கண்ணீருடன் கூறிய ராபர்ட் நான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்ததே என் மகளுக்கு நான் அப்பா என்று தெரியப்படுத்த தான். நான் இறந்த பிறகாவது என் மகளிடம் நான் தான் அப்பா என்று கூறுங்கள் என அவர் கதறியது போட்டியாளர்கள் உட்பட அனைவரையும் கண்கலங்க வைத்தது.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு சில விமர்சனங்களை சந்தித்து வரும் ராபர்ட் நேற்றைய நிகழ்ச்சியின் மூலம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தினார்.