Homeசெய்திகள்சிறுவனால் கர்ப்பமான 16 வயது மாணவிக்கு பிறந்த குழந்தை : கழிவறையில் நடந்த பேரதிர்ச்சி.!

சிறுவனால் கர்ப்பமான 16 வயது மாணவிக்கு பிறந்த குழந்தை : கழிவறையில் நடந்த பேரதிர்ச்சி.!

Published on

கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரி – குறிஞ்சிப்பாடி சாலையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இருக்கிறது.

இப்பள்ளியில் 1200 க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகிறார்கள். இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்னதாக பள்ளியின் கழிவறையில் தொப்புள் கொடியுடன் இறந்த நிலையில் ஆன் சிசு இருந்தது.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பள்ளி மாணவிகள் ஆசிரியரிடம் தகவல் தெரிவிக்கவே, புவனகிரி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் குழந்தையின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அதே பள்ளியில் பயின்று வரும் 11-ம் வகுப்பு மாணவி கழிப்பறையில் பிரசவித்து குழந்தையை வீசி சென்றது தெரியவந்தது.

குழந்தை குறைமாத பிரசவத்தால் உயிரிழந்ததும் அம்பலமானது. இதனையடுத்து, மாணவியிடம் ரகசிய விசாரணை நடந்தது.

அதாவது, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் 10-ம் வகுப்பு மாணவருடன் 11-ஆம் வகுப்பு மாணவிக்கு ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் காதலாக மாறியுள்ளது.

இதனால் காதல் ஜோடி அவ்வப்போது தனிமையில் சந்தித்து பேசிவந்த நிலையில், இருவரும் எல்லைமீறி நடந்துள்ளனர்.

இதனால் சிறுமி கர்ப்பமாகவே, சம்பவத்தன்று கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி கழிவறைக்கு சென்றபோது குறைமாதத்தில் குழந்தையும் இறந்து பிறந்துள்ளது.

இதனால் பதற்றமடைந்த மாணவி குழந்தையை கழிவறைக்கு அருகே உள்ள முட்புதரில் வீசிவிட்டு சென்றுள்ளார்.

மாணவியின் வாக்குமூலத்தின் பேரில் 10-ம் வகுப்பு மாணவனை கைது செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் உண்மை அம்பலமாகவே, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குபதியப்பட்டு சிறுவன் சிறையில் அடைக்கப்பட்டான்.

Latest articles

6 வயதுச் சிறுமி துஷ்பிரயோகம்; பாடசாலை வேனின் சாரதி கைது

வேன் ஒன்றுக்குள் வைத்து 6 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பாடசாலை வேனின் சாரதி...

16 மாணவிகளின் நிர்வாண படங்களைப் பெற்ற மாணவன்

மொடல் அழகிகள் தேவைப்படுவதாக தெரிவித்து பாடசாலை மாணவிகள் 16 பேரின் நிர்வாண புகைப்படங்களை வாங்கிய 19 வயதுடைய மாணவன்,...

RJ பாலாஜியின் மனைவியை தெரியுமா? காதலிக்குபோது எடுத்த போட்டோ இதோ!

வானொலியில் பணியாற்றி அதன் பின் சினிமாவில் காமெடியனாக நடிக்க தொடங்கியவர் RJ பாலாஜி. அவரது காமெடிக்கு எக்கச்சக்க ரசிகர்கள்...

ஷிவானி நாராயணனா இப்படி? கிழிந்த உடையில் வேற லெவல் போட்டோஸ்!

நடிகை ஷிவானி நாராயணன் சீரியல் நடிகையாக தான் முதலில் பிரபலம் ஆனார். அதன் பிறகு இன்ஸ்டாக்ராமில் டான்ஸ் வீடியோக்கள்...

More like this