Malayagam
Home » கடும் குளிரில் தாயார் மற்றும் இரு பிள்ளைகளுக்கு நேர்ந்த துயரம்

கடும் குளிரில் தாயார் மற்றும் இரு பிள்ளைகளுக்கு நேர்ந்த துயரம்

Two children and mum found frozen to death : கடும் குளிரில் தாயார் மற்றும் இரு பிள்ளைகளுக்கு நேர்ந்த துயரம்

Two children and mum found frozen to death : கடும் குளிரில் தாயார் மற்றும் இரு பிள்ளைகளுக்கு நேர்ந்த துயரம்

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் வெட்டவெளியில் சிக்கிய தாயாரும் இரு சிறார்களும் உடல் உறைந்து பலியான சம்பவம் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குளிர் தாங்க முடியாமல் 10 வயது சிறுமி, குடியிருப்பு ஒன்றின் கதவைத் தட்டி உதவி கோரிய நிலையிலேயே மூவர் இறந்துள்ள சம்பவம் தெரிய வந்தது.

35 வயதான மோனிகா கன்னாடி இவரது மகன்களான கைல் மில்டன்(9), மற்றும் மாலிக் மில்டன்(3) ஆகியோரே போண்டியாக் பகுதியில் உடல் உறைந்த நிலையில் சடலமாக மீடகப்பட்டவர்கள்.

Two children and mum found frozen to death : கடும் குளிரில் தாயார் மற்றும் இரு பிள்ளைகளுக்கு நேர்ந்த துயரம்

உடற்கூராய்வில், அவர்கள் மூவரும் கடும் குளிர் காரணமாக இறந்துள்ளது உறுதியாகியுள்ளது. கடின உழைப்பாளியான மோனிகா, சமீப மாதங்களாக உளவியல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளதாக கூறுகின்றனர்.

மேலும், கடும் குளிரில் போதிய பாதுகாப்பு இல்லாமல் ஒரு தாயாரும் பிள்ளைகளும் தெருவில் நடமாடுவதாக அப்பகுதி மக்கள் ஷெரிஃப் அலுவலகத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.

ஆனால் அவர்களாலும் அந்த குடும்பத்தை உரிய நேரத்தில் கண்டுபிடிக்க முடியவில்லை என்றே கூறப்படுகிறது. இதனிடையே, மோனிகாவின் சகோதரர் வார இறுதி நால் முழுவதும் சகோதரி குடும்பத்தை இடைவிடாமல் தேடி வந்துள்ளார் என குடும்பத்தினர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

Most discussed