Homeலைஃப்ஸ்டைல்இந்த 5 உணவுகளை மட்டும் இரவில் தவறி கூட சாப்பிடாதீங்க...

இந்த 5 உணவுகளை மட்டும் இரவில் தவறி கூட சாப்பிடாதீங்க…

Published on

இரவில் தூங்கும் போதுதான் உடல் தன்னை பழுது பார்க்கும் வேலைகளில் ஈடுபடும். அந்த சமயத்தில் ஆரோக்கியமற்ற உணவுகள் உடலின் செயல்பாடுகளை தொந்தரவு செய்யும். இதனால் உடல் ஆரோக்கியம் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகும்.

பகல் நேரத்தில் சாப்பிடும் உணவில் கவனம் செலுத்துவதை போல் கூடுதலாக இரவு உணவில் அக்கறை செலுத்துவது அவசியம். ஏனெனில் இரவில் தூங்கும் போதுதான் உடல் தன்னை பழுது பார்க்கும் வேலைகளில் ஈடுபடும். அந்த சமயத்தில் ஆரோக்கியமற்ற உணவுகள் உடலின் செயல்பாடுகளை தொந்தரவு செய்யும். இதனால் உடல் ஆரோக்கியம் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகும். எனவே இரவில் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன பார்க்கலாம்.

இனிப்பு சாப்பிடுவது ஆபத்தானது 

பூனம் துனேஜாவின் கூற்றுப்படி, ஆரோக்கியமாக இருக்க இரவு உணவில் ஊட்டச்சத்து மிக்க உணவுப் பொருட்களை சேர்க்க வேண்டு. சிலர் இரவு உணவுக்கு பின் இனிப்பு சேர்த்துக்கொள்வது பழக்கமாக கொண்டிருக்கின்றனர். ஆனால் அது தவறான செயல். இரவு உணவில் இனிப்பு சேர்ப்பது உடலில் இன்சுலின் எதிர்ப்பை உருவாக்குகிறது, இது எடை அதிகரிப்பு மற்றும் வீக்கத்திற்கு வழிவகுக்கும்.

இரவு உணவில் பழங்களை சேர்க்க வேண்டாம் 

பழங்களை சாப்பிடுவதன் மூலம் நம் உடலுக்கு பல சத்துக்கள் கிடைக்கும். ஆனால் இரவில் பழங்களை சாப்பிடுவது தீங்கு விளைவிக்கும். சிலர் இரவு உணவில் பழங்களை சாலடாகவும் சாப்பிடுவார்கள். இரவில், அவை இனிப்பு உணவுக்கு சமமாக கருதப்படுகிறது. அதோடு அவை நன்மைக்கு பதிலாக உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

ஜங்க் ஃபுட் சாப்பிட வேண்டாம்

இரவு உணவில் ஜங்க் ஃபுட் சாப்பிடுவது நோய்களை நீங்களே காசு கொடுத்து கூப்பிடுவதற்கு சமம். இந்த உணவுகளை இரவில் மட்டுமல்ல எந்த நேரத்திலும் சாப்பிடக்கூடாது. அந்த வகையில் இரவு நேரத்தில் சாப்பிடுவது இன்னும் உடலுக்கு ஆபத்தானது. இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம். இது மூளைக்கு மிகவும் ஆபத்தானதாகவும் கருதப்படுகிறது.

வறுத்த உணவு

பெரும்பாலும் வறுத்த உணவை சாப்பிடுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. பொரித்த உணவுகளை உண்பதால் நமது இரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கிறது. இது இதயம் மற்றும் இரத்த அழுத்தத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

காபி குடிப்பதை தவிர்க்கவும்

பெரும்பாலான மக்கள் இரவில் காபி குடிப்பதை பார்த்திருப்பீர்கள், ஆனால் இது மிகவும் தவறான செயல். காபி குடிப்பதால் உங்களுக்கு தூக்கக் கோளாறு ஏற்படலாம். நீங்கள் போதுமான அளவு தூங்கவில்லை என்றால், அது பல நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. குறிப்பாக மன ஆரோக்கியத்திற்கு தூக்கம் மிகவும் முக்கியமானது.

Latest articles

6 வயதுச் சிறுமி துஷ்பிரயோகம்; பாடசாலை வேனின் சாரதி கைது

வேன் ஒன்றுக்குள் வைத்து 6 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பாடசாலை வேனின் சாரதி...

16 மாணவிகளின் நிர்வாண படங்களைப் பெற்ற மாணவன்

மொடல் அழகிகள் தேவைப்படுவதாக தெரிவித்து பாடசாலை மாணவிகள் 16 பேரின் நிர்வாண புகைப்படங்களை வாங்கிய 19 வயதுடைய மாணவன்,...

RJ பாலாஜியின் மனைவியை தெரியுமா? காதலிக்குபோது எடுத்த போட்டோ இதோ!

வானொலியில் பணியாற்றி அதன் பின் சினிமாவில் காமெடியனாக நடிக்க தொடங்கியவர் RJ பாலாஜி. அவரது காமெடிக்கு எக்கச்சக்க ரசிகர்கள்...

ஷிவானி நாராயணனா இப்படி? கிழிந்த உடையில் வேற லெவல் போட்டோஸ்!

நடிகை ஷிவானி நாராயணன் சீரியல் நடிகையாக தான் முதலில் பிரபலம் ஆனார். அதன் பிறகு இன்ஸ்டாக்ராமில் டான்ஸ் வீடியோக்கள்...

More like this

6 வயதுச் சிறுமி துஷ்பிரயோகம்; பாடசாலை வேனின் சாரதி கைது

வேன் ஒன்றுக்குள் வைத்து 6 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பாடசாலை வேனின் சாரதி...

16 மாணவிகளின் நிர்வாண படங்களைப் பெற்ற மாணவன்

மொடல் அழகிகள் தேவைப்படுவதாக தெரிவித்து பாடசாலை மாணவிகள் 16 பேரின் நிர்வாண புகைப்படங்களை வாங்கிய 19 வயதுடைய மாணவன்,...

RJ பாலாஜியின் மனைவியை தெரியுமா? காதலிக்குபோது எடுத்த போட்டோ இதோ!

வானொலியில் பணியாற்றி அதன் பின் சினிமாவில் காமெடியனாக நடிக்க தொடங்கியவர் RJ பாலாஜி. அவரது காமெடிக்கு எக்கச்சக்க ரசிகர்கள்...