Malayagam
Home » பிக் பாஸ் செல்வதற்கு முன்பு பிரபலத்திடம் ஆசீர்வாதம் வாங்கிய மைனா நந்தினி!

பிக் பாஸ் செல்வதற்கு முன்பு பிரபலத்திடம் ஆசீர்வாதம் வாங்கிய மைனா நந்தினி!

மைனா நந்தினி

பிரபலத்திடம் ஆசீர்வாதம் வாங்கிய மைனா நந்தினி!

பிக் பாஸ் 6 விரைவில் ஆரம்பம் என்ற பேச்சு தொடங்கிய நாளில் இருந்து இணையத்தில் அடிப்பட்ட பெயர் மைனா நந்தினி. விஜய் டிவி புராடெக்டான இவர் கண்டிப்பாக பிக் பாஸ் 6 செல்கிறார் என உறுதியாக கூறப்பட்டது.

இந்நிலையில் கடந்த 9 ஆம் தேதி பிக் பாஸ் சீசன் 6 லான்ச் நாளன்று 20 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளே சென்றனர். அப்போது மைனா நந்தினி அந்த லிஸ்டில் இல்லை.

இதனால் பலரும் குழம்பி போயினர். பின்பு தான் அவருக்கு உடல் நலம் சரியில்லை என்ற தகவல் வெளியானது. அதன் பின்பு முதல் வார இறுதி எபிசோடில் 21 வது போட்டியாளராக மைனா நந்தினி உள்ளே சென்றார்.

அவர் பிக் பாஸ் வீட்டில் நுழைந்த நாள் முதல் பெரிய சர்ச்சையில் சிக்கவில்லை. அதே போல் சண்டை, வாக்குவாதம் எதிலும் மாட்டவில்லை. பெயர் கெட்டுவிட கூடாது என நோக்கில் சேஃப் கேம் ஆடுவது போல் தெரிந்தாலும் ரசிகர்கள் மைனாவின் காமெடியை ரசிக்கின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜிபி முத்து வாங்கிய சம்பளம் எவ்வளவு?

மைனாவும் அமுதவாணனும் வீட்டில் ஜிபி முத்து இல்லாத குறையை தீர்த்து வருகின்றனர். இந்நிலையில் மைனாவின் யூடியூப்சேனலில் அவர் பிக் பாஸ் செல்வதற்கு முன்பு நடந்த நிகழ்வுகள் வீடியோவாக வெளியாகியுள்ளன.

அதில் பிக் பாஸ் கொரன்டைனுக்கு செல்வதற்கு முன்பு கணவர் யோகேஷ் உடன் மைனா விஜய் டிவி, யூடியூப் பிரபலம் ராஜ்மோகன் வீட்டுக்கு செல்கிறார். அங்கு அவருக்கு விருந்து சாப்பாடு பரிமாறப்படுகிறது.

பின்பு ராஜ்மோகன் காலில் விழுந்து மைனா ஆசீர்வாதம் வாங்க அவருக்கு புடவை வைத்து பரிசு கொடுத்து பிக் பாஸில் வெற்றி பெற வாழ்த்தி அனுப்புகிறார் ராஜ்மோகன்.

அதன் பின்பு வீட்டில் மைனாவுக்கு செண்ட் ஆஃப் பார்ட்டி கொடுக்கப்படுகிறது. அட்வான்ஸ் பிக் பாஸ் டைட்டில் வின்னர் என கேக் வெட்டப்படுகிறது. குடும்பத்தினரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கும் மைனா, குழந்தை துருவ்வை பார்த்து அழுது தீர்க்கிறார்.

பின்பு பிக் பாஸூக்கு கிளம்பி செல்கிறார். பின்பு அங்கு அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் 1 வாரம் கழித்து வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்து இருக்கிறார். அந்த வீடியோவில் ரசிகர்களுக்கு மைனா இதை தெளிவுப்படுத்தி இருக்கிறார்.

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

Most discussed