Save 20% off! Join our newsletter and get 20% off right away!

கல்லூரி பெண்ணாக இருந்தபோது பார்த்தது, அதன் பிறகு இப்போதுதான்

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் நடித்த ‘டாப் கன்’ என்ற திரைப்படம் கடந்த 1986ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தின் பட்ஜெட் 15 மில்லியன் என்ற நிலையில் 357 மில்லியன் உலகம் முழுவதும் வசூலை குவித்தது என்பதும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்த நிலையில் 36 வருடங்கள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியாகிய நிலையில், உலகம் முழுவதும் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தை நடிகை நதியா திரையரங்கில் பார்த்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது ‘டாப் கன்’ முதலாம் பாகத்தை பார்த்தேன் என்றும் அந்த மலரும் நினைவுகள் தற்போது இந்த இரண்டாம் பாகத்தை பார்க்கும்போது கிடைத்துள்ளது என்றும் அவர் அதில் கேப்ஷனாக பதிவு செய்துள்ளார். நதியாவின் இந்த பதிவும், அவரது புகைப்படமும் வைரலாகி வருகிறது.

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.