நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பின் இலக்கணம், நடிப்பின் யுனிவர்சிட்டி என்றெல்லாம் அனைவராலும் புகழப்படுபவர்கள்.
சிவாஜியின் ஸ்டைலாக லுக், தான் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரமாகவே மாறி, அதோடு ஒன்றி தத்ரூபமாக நடிப்பது ஆகியவை ரசிகர்களை பெரிதும் கவர்ந்த விஷயம்.
இது அனைவரும் அறிந்த ஒன்று தான். புகழ்பெற்ற பிஆர்ஓ டைமண்ட் பாபு, தற்போது சிவாஜியின் அரிய ஃபோட்டோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அதில் சிவாஜி தனக்கே உரிய ஸ்டைல் லுக்கில் போஸ் கொடுக்க, அவரை கேமிராவால் ஃபோட்டோ எடுப்பது வேறு யாருமல்ல கமலஹாசன் தான். சிவாஜியை, கமல் விதவிதமான போஸ்களில் ஃபோட்டோ எடுக்கும் இந்த ஃபோட்டோ, இணையத்தில் செம வைரலாகி வருகிறது.
கமல் இதுவரை சிவாஜியுடன் இருக்கும் பல அரிய ஃபோட்டோக்களை வெளியிட்டுள்ளார். ஆனால் இது போன்ற ஒரு ஃபோட்டோ முதல் முறையாக வெளியாகி உள்ளதால் அது ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இதில் வெள்ளை நிற சட்டை, கழுத்தில் டை என செம ஸ்டைலாக சிவாஜி போஸ் கொடுத்துள்ளார்.
பாவ மன்னிப்பு முதல் தேவர் மகன் வரை பல படங்களில் சிவாஜியுடன் இணைந்து நடித்துள்ளார் கமல். தற்போது சிவாஜியுடன் தான் கடைசியாக இணைந்து நடித்துள்ள தேவர்மகன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார் கமல்.
தேவர்மகன் 2 படத்திற்காக கதை தயாரிக்கும் வேலைகளில் கமல் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு கமலே கதை, திரைக்கதை எழுதி வருவதாக கூறப்படுகிறது.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.