HomeசினிமாCinema Newsநாக சைதன்யா இப்படிப்பட்டவர்.. உண்மையை உடைத்த கீர்த்தி

நாக சைதன்யா இப்படிப்பட்டவர்.. உண்மையை உடைத்த கீர்த்தி

நாக சைதன்யாவுடன் ஏற்கெனவே பங்காரராஜூ என்ற படத்தில் நடித்திருக்கிறார் கீர்த்தி ஷெட்டி. இந்நிலையில் அவர் தற்போது நாக சைதன்யாவுடன் வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

கீர்த்தியின் தி வாரியர் திரைப்படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் மீண்டும் நாக சைதன்யாவுடன் இணைவது குறித்து அவர் மனம் திறந்து பேட்டியளித்துள்ளார்.

- Advertisement -

அடுத்த மாதமே நாக சைதன்யாவுடனான படப்பிடிப்பு தொடங்குகிறது. அவருடன் மீண்டும் பணியாற்றுவதை நினைத்து எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவருடன் பணியாற்றுவது எவ்வளவு சவுகரியமானது என்பது எனக்கு ஏற்கெனவே அவருடன் பணியாற்றியதன் அடிப்படையில் நன்றாகத் தெரியும்.

அதுமட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் எங்களின் கூட்டணி மிகவும் பிடித்துவிட்டது. நாங்கள் இருவரும் இணைந்து மக்களுக்கு இன்னொரு நல்ல படமும் கொடுக்க வேண்டும் என்றே நான் நினைக்கிறேன். நாக சைதன்யா 22 என்று இந்தப் படத்திற்கு தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.

- Advertisement -

நான் முதல் முதலாக நாக சைதன்யாவை சந்தித்தது ஓர் இனிமையான தருணம். இத்தனை ஆண்டுகள் சினிமாவில் இருந்தும்கூட நாக சைதன்யா மிக எளிமையானவராக, தூய மனம் கொண்டவராக, நேர்மையானவராக இருக்கிறார்.

அவரிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். அவருடன் பணியாற்றுவது புத்துணர்ச்சியைத் தரும். நாங்கள் முதன்முதலாக ஒரு படப்பூஜையில் தான் சந்தித்தோம். அப்போது செலிப்ரிட்டிகள் எதிர்கொள்ளும் சமூக வலைதள தாக்கம் குறித்து பேசினோம். நாக சைதன்யா தான் சமூக வலைதள விமர்சனங்களை பெரிதாக எடுத்துக் கொள்வது இல்லை என்றார். எல்லாவற்றையும் நேர்மறையான எண்ணத்துடனேயே அணுக வேண்டும் என்று கூறினார்.

நாக சைதன்யா இப்படிப்பட்டவர்.. உண்மையை உடைத்த கீர்த்தி

பங்காரராஜூ படப்பிடிப்பு செட்டில் முதல் நாளில் எனக்கு ரொம்பவே பதற்றமாக இருந்தது. அவர் தி கிங் நாகர்ஜுனா குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் என்ன எந்த மாதிரி நடத்துவார் என்று படபடப்பு இருந்தது. ஆனால் அவரோ என்னிடம் பேசிய விதம் ஏதோ நாங்கள் நீண்ட இடைவெளிக்குப் பின் சந்திக்கும் நண்பர்கள் என்பது போல் உணர வைத்தது. எத்தனை அமைதி என்னே நேர்த்தி. அவர் தான் என் வாழ்வில் நான் சந்தித்த மிகச் சிறந்த மனிதர் என்பேன். இவ்வாறு கீர்த்தி ஷெட்டி கூறியுள்ளார்.

கீர்த்தி ஷெட்டியால் தாறுமாறாக புகழப்பட்டிருக்கும் நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா பிரபல நடிகை ஒருவருடன் டேட்டிங் செய்வதாக வெளியான தகவல் திரையுலக வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் ஹைதராபாத்தின் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் நாக சைதன்யா சொகுசு பங்களா ஒன்றை கட்டியுள்ளார்.

நாக சைதன்யா இப்படிப்பட்டவர்.. உண்மையை உடைத்த கீர்த்தி

அங்கு பிரபல நடிகை ஷோபிதா துலிபாலாவை அடிக்கடி அவர் அழைத்து செல்வதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இருவரும் டேட்டிங் செல்கிறார்களா என பலரும் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நடிகை ஷோபிதா மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் “பொன்னியின் செல்வன்” படத்தில் வானதி கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Most Popular