Save 20% off! Join our newsletter and get 20% off right away!

பிரபல வாரிசு நடிகையுடன் லிவிங் டுகெதரில் இருந்த சமந்தாவின் முன்னாள் கணவர்?

பிரபல தெலுங்கு நடிகரான நாகார்ஜூனாவின் மூத்த மகன் நாக சைதன்யா. தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருகிறார்.

நடிகர் நாக சைதன்யா, தன்னுடன் சில படங்களில் இணைந்து நடித்த நடிகை சமந்தாவை காதலித்தார். கடந்த 2017ஆம் ஆண்டு இருவரும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு இருவரும் அவரவர் படங்களில் பிஸியாக இருந்து வந்தனர். திருமணத்திற்கு பிறகுதான் நடிகை சமந்தாவின் சினிமா கிராஃப் உயரத் தொடங்கியது.

அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை சமந்தாவும் நாக சைதன்யாவும் பிரிவதாக அறிவித்தனர்.

சமூக வலைதள பக்கத்தில் ஒரே மாதிரியான அறிவிப்பை அவர்கள் வெளியிட்டனர். அவர்களின் பிரிவு ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதனை தொடர்ந்து நடிகை சமந்தாவுக்கு வேறு ஒரு நபருடன் இருந்த தவறான தொடர்புதான் அவர்களின் திருமண முறிவுக்கு காரணம் என்றும், அவர் கருக்கலைப்பு செய்ததுதான் காரணம் என்றும் கூறப்பட்டது.

இதனால் மனமுடைந்த சமந்தா, இதுபோன்ற தவறான தகவல்கள் தன்னை காயப்படுத்துவதாக கூறினார். அந்த நேரத்தில் கூட முன்னாள் கணவர் என்ற முறையில் நாக சைதன்யாவோ அல்லது அவரது குடும்பத்தினரோ சமந்தாவுக்கு ஆதரவாக எதுவும் பேசவில்லை. தனி நபராக தன் மீதான பழி சொற்களை சந்தித்து வருகிறார் சமந்தா.

அதேநேரத்தில் நடிகர் நாக சைதன்யாவுக்கு சில நடிகைகளுடன் ஏற்பட்ட நெருக்கமே அவர்களின் திருமண முறிவுக்கு காரணம் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் நடிகர் நாக சைதன்யா பிரபல வாரிசு நடிகையுடன் லிவிங் டுகெதரில் இருந்ததும், சமந்தாவை காதலித்த போதே அவரையும் காதலித்ததாகவும் தகவல் பரவி வருகிறது.

அதாவது நாக சைதன்யா, சமந்தாவை திருமணம் செய்வதற்கு முன்பு நடிகை ஸ்ருதி ஹாசனுடன் லிவிங் டுகெதரில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இருவரும் பிரேமம் ரீமேக் படத்தில் நடித்த போது ஒன்றாக ஊர் சுற்றிய போட்டோக்களும் இணையத்தில் கசிந்து வைரலானது.

இந்நிலையில் நடிகை சமந்தாவையும் நடிகை ஸ்ருதி ஹாசனையும் ஒரே நேரத்தில் ஒருவருக்கொருவர் தெரியாமல் நாக சைதன்யா காதலித்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

2015ஆம் ஆண்டு நாக சைதன்யாவின் பிறந்த நாளுக்கு ஸ்ருதி ஹாசனும் சமந்தாவும் வாழ்த்து கூறியதும், அவர்களுக்கு நாக சைதன்யா பதில் கூறியதும் தற்போது வைரலாகி வருகிறது.

பின்னர் சில காரணங்களுக்காக ஸ்ருதி ஹாசனை பிரிந்த நாக சைதன்யா, சமந்தாவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நடிகை சமந்தாவையும் பிரிந்துள்ளார் நடிகர் நாக சைதன்யா.

ஏற்கனவே நடிகர் நாக சைதன்யா, நடிகை பூஜா ஹெக்டேவுடன் கிசுகிசுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.