தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் ஏராளமாக படங்களில் நடித்து வருபவர் நடிகை பவித்ரா லோகேஷ். சமீபத்தில், இவரது நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ‘வீட்டுல விசேஷம்’ படம் வெளியானது.
இவர் கன்னட நடிகர் சுசீந்திர பிரசாத் என்பவரை கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், தற்போது தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரரும், நடிகருமான நரேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சங்க நடவடிக்கைகளில் நரேஷுடன் இணைந்து பணியாற்றியதால் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாக தகவல் கூறப்படுகிறது. ஏற்கனவே 3 பெண்களை திருமணம் செய்துள்ள 60 வயதான நரேஷ் ஆளுக்கு ஒரு வீட்டில் வைத்து குடித்தனம் நடத்தி வருகிறார். அதேபோன்று, பவித்ராவும், ஏற்கனவே ஒருவருக்கு 2-வது மனைவியாக இருந்தார்.
இந்த நிலையில், பவித்ராவுக்கு நரேஷ் 2-வது கணவராகி உள்ளார். நரேஷ், பவித்ரா இருவரும் முறைப்படி விவாகரத்து பெறாமல் திருமணம் செய்து கொண்டதால் தங்கள் புதிய திருமண அறிவிப்பை ரகசியமாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே 3 திருமணம் செய்து கொண்ட நரேஸுக்கு 4-வது திருமணம் தேவைதானா..? என்று நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதுமட்டுமின்று, எனக்கு நீ 4வது, உனக்கு நான் எத்தனாவது என்று வடிவேலு காமெடியை சொல்லி கிண்டலடித்து வருகிறார்கள்.
Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.