HomeசினிமாCeleb Newsஉச்ச கட்ட மகிழ்ச்சியில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி!

உச்ச கட்ட மகிழ்ச்சியில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் – விக்னேஷ் சிவனும் காதலில் விழ காரணமாக அமைந்த திரைப்படம் “நானும் ரவுடி தான்”. அதன் நினைவாக விக்னேஷ் சிவன் தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு ரவுடி பிக்சர்ஸ் என பெயர் வைத்துள்ளார்.

இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுக இயக்குநர் வினோத் ராஜ் இயக்கத்தில் யுவன் ஷங்கர் இசையில் உருவான ‘கூழாங்கல்’ படத்தின் முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொண்டது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

- Advertisement -

இந்த படம் ஏற்கனவே நெதர்லாந்து நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று, ‘டைகர்’ விருதை தட்டிச் சென்றது.

இந்த விழாவிற்கான தேர்வின் போது நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் பாரம்பரியமான வேஷ்டி புடவையில் சென்று பகிர்ந்துள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது.

- Advertisement -

பின்னர் ஆகஸ்ட் 12ம் தேதி தொடங்கி நடந்து வரும் IFFSA டொரண்டோ விழாவுக்கு கூழாங்கல் படத்தை தேர்வு செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழாவுக்கும் கூழாங்கல் தேர்வு செய்யப்பட்டிருந்தது.

இதை தொடர்ந்து தற்போது மேலும் நயன் – விக்கியை மகிழ்ச்சியாகும் வகையில் இந்த படத்திற்கு மற்றொரு சர்வதேச அளவிலான அங்கீகாரம் கிடைத்துள்ளது.

‘கூழாங்கல்’ திரைப்படம் பிரேசிலில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிடப்பட உள்ளது. தாங்கள் தயாரித்த கூழாங்கல் படத்திற்கு சர்வதேச அளவில் அடுத்தடுத்து அங்கீகாரம் கிடைத்து வருவதால் நயனும், விக்கியும் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனராம்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

RELATED ARTICLES

Most Popular