Save 20% off! Join our newsletter and get 20% off right away!

நயன் – விக்கி முகூர்த்த நேரம், பங்கேற்கும் பிரபலங்கள் யார்?

தென்னிந்திய சினிமாவின் ஹாட் ஜோடியான விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணம் வரும் 9-ந் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது.

ஏற்கனவே இவர்களது திருமணம் திருப்பதியில் நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது , மகாபலிபுரத்தில் உள்ள மஹாப்ஸ் என்ற ஐந்து நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடைபெறவுள்ளது.

இந்த திருமணத்திற்காக வரும் ஜூன் 8-ந் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் திருமணத்தில்,தென்னிந்திய திரையுலகம் மற்றும் பாலிவுட்டில் பல நட்சத்திரங்கள கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருமணத்தில் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொள்ளும் அதே வேளையில், தம்பதியினர் தங்களது சினிமா வட்டார நண்பர்களுக்காக பிரமாண்டமான திருமண ஏற்பாடு செய்துள்ளதாகவும், இதில் சமந்தா மற்றும் விஜய் சேதுபதி கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது முடிந்தவரை பிரமாண்டமாக இருக்கும்,” என்று கூறப்படுகிறது.

இந்த விழாவில் ரஜினிகாந்த், விஜய், அஜித், விக்ரம், சிவகார்த்திகேயன், பிரபல தெலுங்கு நடிகர் ராணா டகுபதி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காலை 5.30 மணி முதல் 7.00 மணிக்குள் இந்து முறைப்படி திருமணம் நடைபெறும். இந்த விழாவில் சுமார் 200 குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள்.

 

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.