HomeசினிமாCeleb Newsநயன்தாராவின் பிறந்தநாளை வேற லெவலில் கொண்டாடிய விக்னேஷ் சிவன்!

நயன்தாராவின் பிறந்தநாளை வேற லெவலில் கொண்டாடிய விக்னேஷ் சிவன்!

Published on

லேடி சூப்பர்ஸ்டார் என செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை நயன்தாராவின் 37வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், நேற்று இரவே தனது வருங்கால மனைவிக்கு ஏகப்பட்ட கேக்குகளை வாங்கி அடுக்கி பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஆரம்பித்துள்ளார் விக்னேஷ் சிவன்.

மேலும், நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு சூப்பரான கிஃப்ட் ஒன்றையும் கொடுக்கப்போவதாக அறிவித்து ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்.

1984 நவம்பர் 18ம் தேதி கேரளாவின் திருவல்லாவில் பிறந்த டயானா மரியம் குரியன் சினிமாவில் நயன்தாராவாக மாறி கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேல் லேடி சூப்பர்ஸ்டாராக அசத்தி வருகிறார்.

இன்று நயன்தாராவின் 37வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தற்போதே காதலருடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள நயன்தாராவின் பர்த்டே பிக்ஸ் வெளியாகி வைரலாகி வருகிறது.

இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் நடிகை நயன்தாராவுக்கும் நிச்சயம் ஆகி விட்ட நிலையில், விரைவில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் 6 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வரும் இருவரும் ஒவ்வொரு ஆண்டும் பிறந்தநாள் கொண்டாட்டங்களை மாறி மாறி கொண்டாடி வருகின்றனர்.

ஒரு பெரிய கேக் மற்றும் 4 குட்டி கேக்குகளுக்கு மத்தியில் கிளிட்டர் உடையில் செம க்யூட்டாக நடிகை நயன்தாரா நிற்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நயன்தாரா பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஆரம்பித்துள்ள நிலையில் ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்த தொடங்கி விட்டனர்.

Happy Birthday Mol என பர்த்டே பலூனிலும் கேக்கிலும் இயக்குநர் விக்னேஷ் சிவன் குறிப்பிட்டு இருப்பதை பார்த்த ரசிகர்கள் நயனை இப்படித்தான் செல்லப் பெயர் வைத்து விக்னேஷ் சிவன் அழைத்து வருகிறார் என்பது தெளிவாகி விட்டதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் அடுத்த பட அறிவிப்பு நாளை அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என இயக்குநர் விக்னேஷ் சிவன் சூப்பர் கிஃப்ட் கொடுக்க காத்திருக்கிறார்.

ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் பேய் படமாக உருவாக உள்ள அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் இயக்குநர் உள்ளிட்ட அறிவிப்புகள் நாளை வெளியாக உள்ளது.

மாயா, டோரா உள்ளிட்ட பேய் படங்களில் நடித்து வந்த நயன்தாரா மீண்டும் ஒரு பேய் படத்தில் நடிக்க உள்ளார். விக்னேஷ் சிவனின் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் கண்மணியாக நடித்து வரும் நயன்தாரா அடுத்ததாக ஹாரர் படத்தில் நடிக்கப் போவது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

Latest articles

6 வயதுச் சிறுமி துஷ்பிரயோகம்; பாடசாலை வேனின் சாரதி கைது

வேன் ஒன்றுக்குள் வைத்து 6 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பாடசாலை வேனின் சாரதி...

16 மாணவிகளின் நிர்வாண படங்களைப் பெற்ற மாணவன்

மொடல் அழகிகள் தேவைப்படுவதாக தெரிவித்து பாடசாலை மாணவிகள் 16 பேரின் நிர்வாண புகைப்படங்களை வாங்கிய 19 வயதுடைய மாணவன்,...

RJ பாலாஜியின் மனைவியை தெரியுமா? காதலிக்குபோது எடுத்த போட்டோ இதோ!

வானொலியில் பணியாற்றி அதன் பின் சினிமாவில் காமெடியனாக நடிக்க தொடங்கியவர் RJ பாலாஜி. அவரது காமெடிக்கு எக்கச்சக்க ரசிகர்கள்...

ஷிவானி நாராயணனா இப்படி? கிழிந்த உடையில் வேற லெவல் போட்டோஸ்!

நடிகை ஷிவானி நாராயணன் சீரியல் நடிகையாக தான் முதலில் பிரபலம் ஆனார். அதன் பிறகு இன்ஸ்டாக்ராமில் டான்ஸ் வீடியோக்கள்...

More like this

6 வயதுச் சிறுமி துஷ்பிரயோகம்; பாடசாலை வேனின் சாரதி கைது

வேன் ஒன்றுக்குள் வைத்து 6 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பாடசாலை வேனின் சாரதி...

16 மாணவிகளின் நிர்வாண படங்களைப் பெற்ற மாணவன்

மொடல் அழகிகள் தேவைப்படுவதாக தெரிவித்து பாடசாலை மாணவிகள் 16 பேரின் நிர்வாண புகைப்படங்களை வாங்கிய 19 வயதுடைய மாணவன்,...

RJ பாலாஜியின் மனைவியை தெரியுமா? காதலிக்குபோது எடுத்த போட்டோ இதோ!

வானொலியில் பணியாற்றி அதன் பின் சினிமாவில் காமெடியனாக நடிக்க தொடங்கியவர் RJ பாலாஜி. அவரது காமெடிக்கு எக்கச்சக்க ரசிகர்கள்...