Save 20% off! Join our newsletter and get 20% off right away!

ஃபுல் மேக்கப்புடன் விக்னேஷ் சிவன் உடன் ஆயுத பூஜையை கொண்டாடிய நயன்தாரா

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தெலுங்கு சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் இவர் இயக்குனரின் பாடலாசிரியருமான விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார்.

இருவருக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. இந்த தகவலை கூட நடிக்க நயன்தாரா நெற்றிக்கண் படத்தின் புரமோஷனுக்காக விஜய் டிவியில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். எந்தவொரு பண்டிகை நாளாக இருந்தாலும் அதனை விக்னேஷ் சிவனுடன் தான் கொண்டாடி வருகிறார் நயன்தாரா.

அதன்படி நடிகை நயன்தாரா இந்த ஆயுத பூஜையை தன்னுடைய காதலரான விக்னேஷ் சிவனுடன் இணைந்து கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. நடிகை நயன்தாரா ஃபுல் மேக்கப்போடு பண்டிகையை கொண்டாடி இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.