நயன்தாரா
முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால்பதித்துவிட்டார்.
கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி தனது நீண்டநாள் காதலரான விக்னேஷ் சிவனை கரம்பிடித்தார். திரைப்பிரபலங்கள், சொந்த பந்தங்களுடன் வெகு விமர்சையாக திருமணம் நடந்து முடிந்தது.
தொடர்ந்து தாய்லாந்து, ஐரோப்பிய நாடுகளில் ஹனிமூனை கொண்டாடினர், கழுத்தில் மஞ்சள் தாலி கயிற்றுடன் கணவருடன் ரொமான்ஸ் செய்த தம்பதிகளின் புகைப்படங்கள் வைரலானது.
இந்நிலையில் கடந்த அக்டோபர் 9ம் தேதி இரட்டை மகன்களுக்கு பெற்றோராகியிருப்பதாக அறிவித்தார் விக்னேஷ் சிவன், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றதாக தெரியவந்தது.
இது சர்ச்சையை கிளப்பிய நிலையில், தற்போது நயன்தாராவின் புதிய போட்டோவை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதில் மஞ்சள் கயிறுடன் இருந்த நயன்தாரா, தாலி பிரித்து கோர்த்து தங்க செயினில் போட்டுள்ளார், நயன்தாராவின் இந்த படம் வைரலாகி வருகிறது.