நானும் ரௌடி தான் காலத்தில் இருந்து இயக்குநர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலித்து வருகிறார்கள். நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக நயன்தாரா கூறினார்.
நிச்சயதார்த்த மோதிரத்தை பார்த்து ரசிகர்கள் சந்தோஷப்பட்டாலும் கழுத்தில் தாலி ஏறும் நாளுக்காக காத்திருப்பதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் நயன்தாராவுடன் சேர்ந்து தீபாவளி கொண்டாடியபோது எடுக்கப்பட்ட வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.
அந்த வீடியோவில் நயன்தாரா அழகாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறார். வீடியோவை பார்த்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது,
யோவ் அன்பான இயக்குநரே, தலைவியை எப்பத் தான் கல்யாணம் செய்வீர்கள்?. இந்த வீடியோவுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. ஆ, ஊன்னா தலைவியுடன் சேர்ந்து செல்ஃபி அல்லது வீடியோ எடுத்து வெளியிடுகிறீர்கள்.
திருமண வீடியோ வரும் வரைக்கும் உங்களை சும்மா விட மாட்டோம். தலைவியை ஏமாற்றிவிடாதீர்கள். அவர் உங்களை ரொம்ப நம்புகிறார்.
சீக்கிரமாக திருமணம் செய்து கொள்ளுங்கள். வயது ஏறிக் கொண்டே போகிறது என்று தெரிவித்துள்ளனர்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.