நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் 7 ஆண்டுகள் காதலுக்கு பிறகு கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் அவர்களின் திருமணம் நடைபெற்றது. இதில் பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர்.
பின்பு திருப்பதி கோவிலுக்கு சென்று சர்ச்சையில் சிக்கிய நிலையில், தொடர்ந்து தாய்லாந்துக்கு சென்று தனது ஹனிமூனைக் கொண்டாடினர்.
ஹனிமூன் முடிந்து இந்தியா திரும்பிய இந்த ஜோடிகள் தங்களது வேலையில் பயங்கர பிஸியாக இருந்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த வாரம் இருவரும் ஸ்பெயினுக்கு இரண்டாவது ஹனிமூன் புறப்பட்டனர். தற்போது பார்சிலோனாவில் கொண்டாட்டத்தில் உள்ள அங்கு சினிமா படப்பிடிப்பிற்கு இடத்தினையும் தெரிவு செய்து வருவதாக கூறப்படுகின்றது.
கணவருக்காக ஆடைகளை தெரிவு செய்வது, பல இடங்களுக்கு சென்று ஜோடியாக புகைப்படம் என்று குஷியாக வலம்வரும் இந்த ஜோடிகள் அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது நயன்தாரா தனியாக எடுத்த புகைப்பட தொகுப்பினை வெளியிட்டுள்ளார். இதனை அவதானித்த ரசிகர்கள் என்னாச்சி விக்கியை கழற்றி விட்டுட்டீங்க என்று கேள்வி எழுப்பி வருவதுடன், நயன்தாராவின் புகைப்படத்தையும் வைரலாக்கி வருகின்றனர்.