Malayagam
Home » நெஞ்சுக்கு நீதி – சமூக நீதி பேசும் தரமான சினிமா

நெஞ்சுக்கு நீதி – சமூக நீதி பேசும் தரமான சினிமா

இரு தலித் சிறுமிகளின் மர்ம மரணத்துக்கான காரணத்தையும், காணாமல் போன ஒரு சிறுமியைத் தேடியும் புறப்படும் போலீஸ் அதிகாரியின் கதையே நெஞ்சுக்கு நீதி.

பொள்ளாச்சியில் ஏ.எஸ்.பியாகப் பொறுப்பேற்கிறார் விஜயராகவன் (உதயநிதி). வெளிநாட்டில் படித்து வளர்ந்து இந்தியாவில் காவல்துறை அதிகாரியாகப் பணிபுரியும் அவருக்கு சாதிய அடுக்குகள் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துகின்றன.

அந்த ஊரில் இரு தலித் சிறுமிகள் மர்மமான முறையில் மரணம் அடைகின்றனர். மரத்தில் தூக்கில் தொங்கியபடி அவர்களின் சடலங்கள் கிடைக்கின்றன. ஆனால், உண்மையான பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைக்கச் செய்யாமல் ஆதிக்க சாதியினர் அரசியல் செய்கின்றனர்.

உடன் பணிபுரியும் காவலர்களும் விசாரணையை முடுக்கிவிடாமல் ஒத்துழைக்க மறுக்கின்றனர். இச்சூழலில் ஏ.எஸ்.பி. விஜயராகவன் என்ன செய்கிறார், மர்ம மரணத்துக்கான விடையைத் தேடிக் கண்டுபிடித்தாரா,
காணாமல் போன சிறுமியைக் கண்டுபிடிக்க முடிந்ததா, சாதிய அடுக்குகளில் உள்ள பிரச்சினைகளால் பாதிக்கப்படுவது யார் போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது திரைக்கதை.

ஆர்ட்டிகிள் 15 இந்திப் படத்தின் ஆன்மாவைச் சிதைக்காமல் உணர்வுகளை அப்படியே கடத்திய விதத்தில் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் வெற்றி பெற்றுள்ளார்.

வருங்கால அரசியலில் ஆதாயத்துக்காக நடிகரைத் தூக்கி நிறுத்தாமல், சாகச நாயக பிம்பத்தைக் கட்டமைக்காமல் படைப்புக்கு நேர்மையுடன் இருந்த அவரைப் பாராட்டலாம்.

உதயநிதிக்கு இது 12-வது படம். திரைத்துறைக்கு வந்த 10 ஆண்டுகளில் சமூக நீதி பேசும் ஒரு படத்தில் கச்சிதமான நடிப்பைக் கொடுத்துள்ளார்.

உடல்மொழி, வசனம், பார்வை என அனைத்திலும் நல்ல நடிகனுக்கான அடையாளங்களைக் கொடுத்து தடம் பதிக்கிறார். மனிதன், நிமிர், கண்ணே கலைமானே, சைக்கோ படங்களில் வெளிப்படுத்திய நடிப்பைக் காட்டிலும் இதில் முன்னேறியுள்ளார்.

தான்யா ரவிச்சந்திரன் படத்துக்குப் பக்கபலம். வழக்கமான நாயகியாக இல்லாமல் நாயகனுக்கு வழிகாட்டும், அறிவுறுத்தும் நாயகியாகச் சித்தரித்திருப்பது செம்ம. சுரேஷ் சக்கரவர்த்தி, இளவரசு ஆகிய இருவரும் அட்டகாசமான நடிப்பை வழங்கியுள்ளனர்.

ஆரி அர்ஜுனன் போராளிக்குரிய பாத்திர வார்ப்பில் எந்தக் குறையுமில்லாமல் நடித்துள்ளார். ராட்சசன் சரவணன், ஷிவானி ராஜசேகர், ரமேஷ் திலக், மயில்சாமி ஆகியோர் கதாபாத்திரத்தின் நோக்கத்தை நிறைவேற்றுகிறார்கள்.

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

Most discussed