இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து சுருதி தான் வெளியேறி உள்ளார் என்கிற தகவலும் லீக்கான நிலையில், சனிக்கிழமை எபிசோடில் கமல் சார் சுருதியை பாராட்டியதை பார்த்து ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் ஒவ்வொரு வாரமும் கமல் சாரிடம் பாராட்டுக்களை பெற்று வந்த சுருதி இந்த வாரம் எலிமினேட் ஆகி இருப்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஷாக்காக மாறி உள்ளது.
நமீதா மாரிமுத்து, அபிஷேக் ராஜா மற்றும் சுருதி என கன்டென்ட் கொடுத்து வரும் போட்டியாளர்கள் திடீர் திடீரென வெளியேறுவது ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளது.
தனது துணிச்சலான பேச்சு மற்றும் கேம் விளையாடுவது என பிக் பாஸ் நிகழ்ச்சியில் மற்ற பெண் போட்டியாளர்களை விட சுருதி நல்லாவே ஸ்கோர் செய்து வந்தார். சுருதியை பல முறை வார இறுதி நாட்களில் கமல் சார் பாராட்டி வந்த நிலையில், இன்றைய எபிசோடிலும் கமல் சுருதியை பாராட்டி உள்ளார்.
செண்பகமே செண்பகமே டாஸ்க்கில் சிபி, நிரூப், அக்ஷரா, பிரியங்கா, அண்ணாச்சி என எல்லாருமே ஆக்ரோஷமாக விளையாடினார்கள் பாலில் தண்ணீர் கலந்த காமெடி அதனால் பாவனிக்கும் தாமரைக்கும் உண்டான சண்டை என பலரும் இஷ்டத்துக்கு விளையாட நேர்மையாக விளையாடினார் சுருதி என கமல் சனிக்கிழமை எபிசோடில் பாராட்டித் (தள்ளினார்).
இப்படி ஃபேரா விளையாடின சுருதி பெரியசாமி தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளார் என்கிற தகவல் ரசிகர்களுக்கு ஷாக்கை கொடுத்திருக்கிறது. ஞாயிற்றுக் கிழமை எபிசோடில் சுருதியின் வெளியேற்றம் எப்படி இருந்தது என்பதை காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இப்படி பாராட்டி பாராட்டியே சுருதியை பார்சல் செய்து விட்டீர்களே கமல் சார் என பிக் பாஸ் ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர். வருண், அபிநய், இசைவாணியை எல்லாம் வெளியே கொண்டு வர கடும் போராட்டம் செய்து வரும் கமல் மற்றும் பிக் பாஸ் குழுவினர் போல்டாக விளையாடும் சுருதியை வெளியேற்றுவது ஏற்றுக் கொள்ள முடியாது என்பது ஏகப்பட்ட ரசிகர்களின் கருத்து.
தலைவர் போட்டியில் தீர்ப்பை மாற்ற மட்டுமே காயினை பிக் பாஸ் உபயோகிக்க கேட்டிருந்தார். வருண் உஷாராக அந்த காயினை பயன்படுத்தி தலைவர் பதவியை பெற்றுக் கொண்டு தனது எவிக்ஷனை தள்ளிப் போட்டுள்ளார். ஆனால், தாமரை காயினை திருடியும் சுருதியால் ஏன் தப்பிக்க முடியவில்லை என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.