தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. நாளுக்கு நாள் பல்வேறு ட்விஸ்ட்களோடு விருவிருப்பாக ஒளிபரப்பாகி டிஆர்பி யில் தொடர்ந்து முக்கிய இடத்தில் இருந்து வருகிறது. இந்த சீரியலில் நாயகியாக ரோஷ்நி ஹரிப்ரியன் நடித்து வருகிறார்.
இவர் திடீரென சில காரணங்களால் சீரியலில் இருந்து விலகிக்கொண்டார். விரைவில் புதிய கண்ணம்மாவாக நடித்துள்ளவரின் எபிசோட் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் யார் தான் அந்த கண்ணம்மா என இன்னும் தெளிவாக தெரியவில்லை.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி நட்சத்திரா நடிப்பதாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது மாடல் மற்றும் டிக் டாக் பிரபலமான வினுஷா தேவி தான் கண்ணம்மாவாக நடிக்கிறார் என கூறப்படுகிறது.
இவர் அச்சு அசலாக அப்படியே கண்ணம்மா போலவே இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.