Homeசெய்திகள்தேனிலவுக்கு சென்ற தம்பதி... அறைக்குள் எட்டிப்பார்த்து ஆடிப்போன ஹோட்டல் ஊழியர்கள்

தேனிலவுக்கு சென்ற தம்பதி… அறைக்குள் எட்டிப்பார்த்து ஆடிப்போன ஹோட்டல் ஊழியர்கள்

அமெரிக்காவின் டென்னசியை அடுத்த மெம்பிஸ் என்னும் பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டி ஜியோன் சென் என்ற பெண்ணுக்கு, பிராட்லி ராபர்ட் டாவ்சன் என்பவரும் திருமணம் நடந்துள்ளது.

இதையடுத்து, ஐடி ஊழியராக பணிபுரியும் அவர், இருவரும் தங்களின் தேனிலவுக்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு, பிஜி நாட்டில் உள்ள ட்ருட்லி என்னும் தீவுக்கு சென்றுள்ளனர். அங்கு சொகுசு ஹோட்டலில் தங்கியுள்ளனர்.

- Advertisement -

அப்படி ஒரு நிலையில், இரண்டு தினங்கள் கழித்து, சென் மற்றும் டாவ்சன் ஆகியோர், காலை உணவை அருந்த வெளியே வரவில்லை என கூறப்படுகிறது.

பின் அவர்களின் அறைக்கு வெளியேவும், தொந்தரவு செய்ய வேண்டாம் என்ற குறிப்பு பலகையும் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

- Advertisement -

இதனால், அந்த ஹோட்டலின் பணியாளர், தன்னிடம் இருந்த மாற்று சாவியை பயன்படுத்தி, கதவை திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.

அப்போது டாவ்சனின் மனைவி சென் உடலில் காயங்கள் மற்றும் ரத்தங்களுடன் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ந்து போயுள்ளார். உடனடியாக, இதுகுறித்து போலீசாருக்கும் அந்த பணியாளர் தகவலை தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.

கணவர் பிராட்லியும் தீவு ஒன்றிற்கு தப்பிச்சென்றுள்ளதாக கூறப்பட்டது. உடனடியாக, டாவ்சனை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

முதற்கட்ட விசாரணையில் சென் மற்றும் பிராட்லி அறை எடுத்து தங்கிய போது, அவருக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது தான், கோபத்தின் உச்சத்தில் இருந்த பிராட்லி, வாக்குவாதம் முற்றிய போது, ஹோட்டலின் கழிவறையில் வைத்து தாக்கியதாக தெரிவித்து இருக்கிறார்.

அதன் பின் அங்கிருந்து கயாக் துடுப்பு படகு மூலம், அவர் தீவை விட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.

தேசிய விருது பெற்ற நடிகர் சூர்யாவின் நெகிழ்ச்சி பதிவு – ரசிகர்கள் வாழ்த்து!
தேசிய விருது பெற்ற நடிகர் சூர்யாவின் நெகிழ்ச்சி பதிவு – ரசிகர்கள் வாழ்த்து!

RELATED ARTICLES

Most Popular