கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களில் ஒருவரின் மரணம் இடம் பெற்றிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு இலங்கையில் பதிவான மொத்த கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களின் மரண எண்ணிக்கை 130 ஆகும்.
பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதான ஆண் நபர், கொவிட் தொற்று நோயாளராக இனங்காணப்பட்ட பின்னர் தேசிய தொற்று நோயியல் பிரிவில் சிகிச்சைப் பெற்றுக்கொண்டிருந்த போது 04ஆம் திகதி உயிரிழந்தார்.
மரணத்திற்கான காரணம் கொவிட் -19 நிமோனியாவால் அதிகரித்த பாக்டீரியா தொற்று மற்றும் இதய நோய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.