Fri, May7, 2021

உடன் அமுலாகும் வகையில் நாட்டின் மேலும் சில பகுதிகள் முடக்கம்

கொழும்பு, காலி, அம்பாறை, இரத்தினபுரி முதலான மாவட்டங்களின், 7 கிராம சேவகர் பிரிவுகள், உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.

இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தின், பிலியந்தலை பொலிஸ் அதிகார பிரிவின், நாம்பமுனுவ மற்றும் கொரக்காபிட்டி கிராம சேவகர் பிரிவுகள் தற்போது முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

காலி மாவட்டத்தின் அம்பலாங்கொடை பொலிஸ் அதிகார பிரிவின், கொடஹேன மற்றும் தல்கஸ்கொட கிராம சேவகர் பிரிவுகளும் தற்போது முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டத்தின், தெய்யத்தகண்டி பொலிஸ் அதிகார பிரிவின், தெய்யத்தகண்டி மற்றும் கதிராபுற கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.

இரத்தினபுரி மாவட்டத்தின், கலவானை பொலிஸ் அதிகார பிரிவின், ஹப்புகொட கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

SEITHI.LK

விளையாட்டு

செய்திகள்