Fri, May7, 2021

சீன பாதுகாப்பு அமைச்சர் நாட்டைவிட்டு வெளியேறினார்

சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங்கின் இலங்கைக்கான பயணம் நிறைவடைந்துள்ளது.

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றுமுன்தினம் இரவு இலங்கைக்கு வந்த அவர், நாட்டில் இருந்து வெளியேறியுள்ளாரென அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிற்கு விஜயம் செய்திருந்த சீன பாதுகாப்பு அமைச்சர், நேற்றைய தினம் ஜனாதிபதி மற்றும் பிரமருடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்த அவர், குறித்த சந்திப்பின் ஊடாக இரு நாட்டிற்கும் இடையிலான தொடர்பு மேலும் வலுப்பெற்றதாக தெரிவித்திருந்தார்.

அதன்பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினரையும் சந்தித்து அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார்.

ஒக்டோபரில் சீனாவின் மூத்த இராஜதந்திரி யாங் ஜீச்சியின் விஜயத்தைத் தொடர்ந்து சீன அதிகாரி ஒருவர் இலங்கைக்கு மேற்கொண்ட இரண்டாவது உயர்மட்ட விஜயம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

SEITHI.LK

விளையாட்டு

செய்திகள்