ஜப்பான், சாகமிஷாரா பகுதி போலீஸ் நிலையத்தில், கடந்த 2016 ஜூலை 16 ஆம் தேதி ரத்தம் சொட்ட சொட்ட கூர்மையான ஆயுதத்துடன் இளைஞர் சரணடைந்தார்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல முதியவர்களை கொலை செய்ததாக கூறியுள்ளார்.
சதோஷி உமாதசு (வயது 26) என்ற நபர், அங்குள்ள சுக்காய் லில்லி கார்டன் ஊனமுற்றோர் முதியோர் இல்லத்தில் மூன்று வருடமாக பணியாற்றி வந்துள்ளார்.
ஊனற்றவர்களை காணும் சமயத்தில் ஏற்படும் வெறுப்பால் கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தனது பணியை ராஜினாமா செய்துள்ளார்.
நான்கு மாதம் கழித்து ஜூலை 26 ஆம் தேதி முதியோர் இல்லத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்து கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது, சுமார் 19 பேரை கொடூர கொலை செய்துள்ளார். சம்பவத்தன்று 149 முதியோர்கள் மற்றும் 9 ஊழியர்கள் இல்லத்தில் இருந்துள்ளனர்.
26 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்ட நிலையில், நேரடியாக சதோஷி உமாதசு காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
ஊனமுற்றவர்கள் நாட்டிற்கு பாரமானவர்கள் என்றும், அவர்கள் உயிருடன் இருப்பது நாட்டிற்கே வீண் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இவருக்கான அனைத்து குற்றமும் நிரூபணம் செய்யப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.