செய்திவாசிப்பாளர் பனிமலர் கோவையில் சேர்ந்தவர். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத்துறையில் உள்ளார். இவர் சன் தொலைக்காட்சியில் தான் தன்னுடைய பணியைத் தொடங்கினார்.
அதன் பின்னர் பாலிமர், புதிய தலைமுறை, நியூஸ் செவன் என பல்வேறு ஊடகங்களில் பணியாற்றியுள்ளார். மேலும், ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப், கூகுள் சர்ச் என பல சமூக வலைத்தளங்களில் இவர் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பனிமலர் அவர்கள் தன்னிடம் தரைகுறைவாக சமூகவலைத்தளங்களில் வீடியோவில் பேசியவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதே போல கடை திறப்பிற்கு அழைத்து ஒரு நாள் இரவு தங்க வேண்டும் அதற்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் என்று வாட்ஸ் அப்பில் ஒருவர் பணிமலருக்கு மெசேஜ் செய்துள்ளார்.
அந்த ஆதாரத்தை பதிவிட்ட பனிமலர், கடை திறப்புக்கு கேட்டுட்டு, ஒரு நைட்டுக்கு இவன் எவ்ளோ வேணாலும் தரானாம். பெண் தொழில் முனைவோருக்கு விளம்பரம் பண்ணும்போது 1 மணி நேர வீடியோல 10 நிமிசம் அநாவசியமா யாரயும் தொந்தரவு பண்ணாதீங்கனு சொல்றேன். அப்பவும் இது நடந்துட்டேதான் இருக்கு.
இன்னைக்கு ஒரு அக்காட்ட பேசும்போது லைவ் முடுஞ்சதும் வீடியோ கால் வந்துச்சுமா நிர்வாணமா நிக்குறான்னு அழுகுறாங்க. எவ்ளோ கேவலம் இதெல்லாம்.
பெண்கள் வேலை செய்யலனா செய்யலனு சொல்றோம் செய்யும்போது இப்டி தொந்தரவு செஞ்சா அவுங்களும் என்னதான் செய்வங்க. இதும் இந்திகாரனுக நிறைய பேர் இப்டி திரியுறானுக. ஆண்கள் இது மாதிரி செய்யும்போது நம் வீட்டு பெண்கள்கிட்டயும் யாரோ இப்டி நடந்துக்குவாங்கனு நினைவிருக்கட்டும்.
பெண்களைக்கு இதுக்கெல்லாம் பயந்து நாம வேலை செய்யாம இருக்கமுடியாது, தைரியமா டீல் பண்ணுங்க. அது மாதிரி பண்ற பெரும்பாலானவுங்க தன்நம்பிக்கை இல்லாத பயந்தாகோலிகதான் நீங்க சத்தமா பேசுனாலே ஓடிருவானுக என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் இதுகுறித்து லைவ் வீடியோவில் பேசிய பனிமலர் தனக்கு ஆபாசமாக மெசேஜ் செய்தவர்களை வெளுத்து வாங்கி இருக்கிறார்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.