Malayagam
Home » இந்த பொருளை தானம் செய்வதன் மூலம் உங்கள் ஆசைகள் அப்படியே நிறைவேறுமாம்!

இந்த பொருளை தானம் செய்வதன் மூலம் உங்கள் ஆசைகள் அப்படியே நிறைவேறுமாம்!

நினைத்தது நடக்க பரிகாரம் | Ninaithathu nadakka pariharam

நினைத்தது நடக்க பரிகாரம் | Ninaithathu nadakka pariharam

நம் மனதில் நினைக்கும் வேண்டுதல்கள், கோரிக்கைகள் அல்லது ஆசைகள் எதுவாக இருந்தாலும் அதை அப்படியே நிறைவேறுவதற்கு உரிய எளிய சாஸ்திர பரிகாரம் ஒன்று உண்டு.

இதை செய்வதால் நமக்கு தீராத ஆசைகளும், வேண்டுதல்களும் தீர்வதாக நம்பிக்கை உண்டாகிறது.

தொன்று தொட்டு நம்முடைய பாரம்பரிய வழக்கப்படி நினைத்தது நிறைவேற, வெற்றி உண்டாக விநாயகருக்கு தேங்காய் உடைப்பது வழக்கம்.

தேங்காய் உடைத்து விட்டு செய்யும் எந்த ஒரு காரியமும் தடை இல்லாமல் அப்படியே நடக்கும் என்பது தான் ஐதீகம்.

அந்த வகையில் இந்த ஒரு விஷயமும் அடங்கும். கல்யாண வீடுகளில் கடைசியாக திருமணம் முடிந்து வீட்டிற்கு செல்லும் உறவினர்களிடம், நண்பர்களிடம் தேங்காய் பை ஒன்றை கொடுப்பதை நாம் பார்த்திருப்போம்.

அவர்கள் ஆசீர்வதித்த ஆசீர்வாதம் அப்படியே பலிக்க வேண்டும். மனதில் நினைத்த விஷயம் அப்படியே மணமக்களுக்கு நடக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே தேங்காயை தானமாக கொடுத்து வழி அனுப்புகிறோம்.

நினைத்தது நடக்க பரிகாரம் | Ninaithathu nadakka pariharam

இந்த தேங்காய் ஆன்மீகத்தில் ரொம்பவே பெரிய பங்கு வகிக்கிறது. தேங்காய் இல்லாமல் பூஜைகள் நிறைவேற்றப்படுவது கிடையாது. எந்த ஒரு நல்ல விஷயம், பூஜை, புனஸ்காரம் செய்தாலும் அதில் கட்டாயம் தேங்காய் இடம் பெற்றிருக்க வேண்டும்.

தேங்காய் கலசம் வைப்பது அல்லது உடைத்து இரண்டு புறமும் வைத்து வழிபடுவது, தேங்காய் தண்ணீர் வைத்து பூஜைகள் செய்வது போன்றவையும் நம் வேண்டுதல்களை பலிக்க செய்யும் அற்புத பரிகாரங்களாகும்.

எனவே தேங்காய் இல்லாமல் எந்த ஒரு பூஜையையும் செய்ய வேண்டாம். நீங்கள் வீட்டில் சாதாரணமாக வெள்ளிக்கிழமை பூஜை செய்யும் பொழுதும், தேங்காய் வைத்து செய்து பாருங்கள், உங்களுடைய வேண்டுதல் விரைவாகவே நிறைவேறுவதை உணர முடியும்.
அந்த அளவிற்கு தேங்காயில் இருக்கும் மகத்துவம் அபரிமிதமானது. தேங்காயில் பூ இருந்தால் ரொம்பவே அதிர்ஷ்டம் என்றெல்லாம் கூறப்படுவது உண்டு.

வீட்டில் தேங்காய் மரம் வளர்க்க விரும்புவர்கள், அதனுடன் தென்னம்பிள்ளையையும் சேர்த்து வைத்தால் அந்த வீட்டில் சுபீட்சம் நிலைக்கும். மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை, எனவே தேங்காயை தனியாக மரமாக வைக்காமல், தென்னம்பிள்ளையுடன் சேர்த்து வையுங்கள்.

இந்த தேங்காயை நீங்கள் யாராவது ஒருவருக்கு தானம் கொடுத்து விட்டு உங்களுடைய வேண்டுதலை வைத்தால், எந்த ஒரு விஷயமும் தடை இல்லாமல் நடக்கும். கோவிலுக்கு செல்கிறீர்கள் என்றால் தேங்காயை கையோடு கொண்டு செல்லுங்கள். இதை சுவாமிக்கு உடைத்து, நீங்கள் வழிபட்டால் வேண்டியது நிறைவேறும்.

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

Most discussed