இந்த வாரம் நிரூப் வைத்துள்ள நிலம் காயினுக்கான ஆளுமை கொடுக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் வீட்டில் இருந்து நேற்று முன்தினம் சின்னப்பொண்ணு வெளியேற்றப்பட்டார்.
இதனை தொடர்ந்து நிரூப்புக்கு கொடுக்கப்பட்ட சலுகைகள் குறித்த அறிக்கையை வாசிக்கிறார் பிரியங்கா. அதில், பஞ்சபூதத்தன் ஆற்றல் கொண்ட நிலம், எல்லா வளத்தையும் தருகிறது.
இதில் நிலச்சரிவும் நடக்கும், புதிய பூவும் முளைக்கும் இப்படிபட்ட நிலத்தின் ஆற்றலை சொந்தமாக்கிய நிரூப்பின் அனுமதி பெற்றே பெட்ரூமின் உள்ளே செல்ல வேண்டும். பெடஸ்டரில் நாணயம் எப்போது இருக்கிறதோ அப்போது மட்டுமே போட்டியாளர்கள் உள்ளே வர வேண்டும்.
மேலும், படுக்கை அறையை சுத்தம் செய்ய தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம் மேலும், பெண் போட்டியாளர்களில் ஒருவரை உதவியாளராக நிரூப் நியமித்துக் கொள்ளலாம்.
அந்த உதவியாளர் நிரூப்பிற் தேவையான உதவிகளை செய்து கொடுக்க வேண்டும். மேலும் உதவியாளர் மற்றவர்களை கண்காணித்து அவர்களின் நிறை,குறைகளை நிரூப்பிடம் தெரிவிப்பார்.
இதனை தொடர்ந்து அக்ஷராவை தனக்கு உதவியாளராக வரும்படி அழைக்கிறார் நிரூப். இதனை சற்றும் விரும்பாத அக்ஷரா, பிக்பாஸ் எனக்கு அவரிடம் உதவியாளரான இருக்க விருப்பமில்லை என்கிறார்.
இதனால், எனக்கு என்ன பனிஷ்மென்ட் கொடுக்கிறீர்களோ கொடுங்கள், இல்லை வீட்டை விட்டு வெளியே போக வேண்டும் என்றாலும் பிரச்சனை இல்லை என்கிறார் அக்ஷரா.
இதனைக் கேட்ட நிரூப், இதைத்தான் அவர் முதலில் இருந்தே சொல்லிக் கொண்டிருக்கிறார் பிக்பாஸ், நீங்கள் தான் அவளை வீட்டிலேயே வைத்திருக்கிறீர்கள் என கூறுகிறார்.
இதையடுத்து பேசிய பிக் பாஸ் நிரூப்பிடம் நிலத்தின் நாணயம் இருப்பதால் அவர் எடுப்பது தான் முடிவு என்று கூறுகிறார். பின்னர் நிரூப் மற்றும் அக்ஷரா இருவரும் சமாதானமாக பேசினர்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.