பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் டான்ஸ் மாரத்தான் டாஸ்க்கில் தடுமாறி விழுந்த நிரூப் காலில் கட்டுடன் ஆட்டம் போட்டார்.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நேற்றுடன் 50 நாட்களை எட்டியுள்ளது. இதனை முன்னிட்டு பிக்பாஸ் வீட்டில் ஹவுஸ்மேட்டுகளுக்கு டான்ஸ் மாரத்தான் டாஸ்க்கை அளித்தார் பிக்பாஸ்.
அப்போது சிலர் வேக் அப் பாடலுக்கு எழுந்து நடனமாடுகிறார்கள். சிலர் நடனமாடாமல் உள்ளனர். ஹவுஸ்மேட்டுகளின் டான்ஸ் திறமையை பார்க்கும் வகையில் டான்ஸ் மாரத்தான் நடத்தப்படுவதாக கூறினார் பிக்பாஸ்.
இதில் பாடல் போடப்பட்டதும் ஜோடி ஜோடியாக போட்டியாளர்கள் நடனம் ஆட வேண்டும் என்றும் கூறினார் பிக்பாஸ். இதனை தொடர்ந்து ஒலிக்கப்பட்ட பாடலுக்கு ஏற்ப ஹவுஸ்மேட்ஸ், கார்டன் ஏரியாவில் அமைக்கப்பட்ட மேடையில் நடனமாட வேண்டும்.
இதில் சரியாக நடனமாடாத ஜோடிக்கு ஹுட்டர் சவுண்ட் ஒலிக்கப்படும். சரியாக நடனமாடும் ஜோடிக்கு பாடல் ஃபேடு அவுட் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து முதல் ஜோடியாக ராஜுவும் ஐக்கி பெர்ரியும் செம கலக்கலாக குத்தாட்டம் போட்டனர். அவர்களுக்கு பாடல் ஃபேடு அவுட் செய்யப்பட்டது.
அவர்களை தொடர்ந்து பாவனியும் அண்ணாச்சியும் ஜோடியாக ஆடினர். அவர்களின் நடனத்தின் போது ஹுட்டர் சவுண்டு ஒலிக்கப்பட்டது. பின்னர் அபிஷேக் ராஜாவும் அபினய்யும் நடனமாடினர். அவர்களுக்கும் ஹுட்டர் சவுண்டு ஒலிக்கப்பட்டது.
பின்னர் பிரியங்காவும் நிரூப்பும் நடனமாடுவதற்காக மேடைக்கு துள்ளிக் குதித்து ஓடினர். அப்போது தடுமாறி கீழே விழுந்தார் நிரூப். இதில் அவரது காலில் அடிப்பட்டது. இதைத்தொடர்ந்து நிரூப்புக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு அவரது காலில் கட்டுப் போடப்பட்டது.
இதைத்தொடர்ந்து உங்களால் ஆட முடியுமா என்று நிரூப்பிடம் கேட்டார் பிக்பாஸ். ஆடுகிறேன் என்று நிரூப் கூறவும் அப்போ மேடைக்கு வாங்க என்று பிக்பாஸ் பாட்டை ஒலிபரப்ப காலில் கட்டுடனே பிரியங்காவுடன் ரொமான்டிக் ஆட்டம் போட்டார் நிரூப். ஆனாலும் ஹுட்டர் சவுண்டுதான் ஒலிபரப்பப்பட்டது. நிரூப் காலில் அடிப்பட்டதை பார்த்த ஹவுஸ்மேட்ஸ் பதறிவிட்டனர்.
Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.