பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த 27 நாட்களாக விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகி வருகிறது. மிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த ரியாலிட்டி ஷோவில் இதுவரை நமீதா மாரிமுத்து மருத்துவ காரணங்களால் அவராக வெளியேறி உள்ளார்.
அவரைத் தொடர்ந்து நாடியா சாங் மற்றும் அபிஷேக் ராஜா ஆகியோர் எலிமினேஷன் மூலம் வெளியேற்றப்பட்டுள்ளனர். நான்காவது வாரத்தின் கடைசி நாளான இன்று அடுத்ததாக ஒருவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற உள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது வாரத்தில் 9 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் காயின் வைத்திருக்கும் இசைவாணி, பாவனி, வருண் ஆகியோர் எலிமினேஷனில் காயினின் பவரை பயன்படுத்த போவதில்லை என கூறி விட்டனர். அதனால் வெளியேற போவது யார் என்ற குழப்பம் ஏற்பட்டது.
எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்களில் சின்ன பொண்ணு, இசைவாணி, சுருதி, அபினய் ஆகிய நான்கு பேரும் டேஞ்சர் ஜோனில் உள்ளனர். இவர்களில் யார் வெளியேற போகிறார் என்பதை கமல் இன்று அறிவிக்க உள்ளார். இந்நிலையில் நேற்றைய எபிசோடின் இறுதியில் இசைவாணி மற்றும் இமான் அண்ணாச்சி காப்பாற்றப்படுவதாக கமல் அறிவித்து விட்டு சென்றார்.
இதனால் சின்னபொண்ணு, அபினய், சுருதி இவர்களில் ஒருவர் இன்று வெளியேற உள்ளார். லேட்டஸ்ட் தகவலின்படி, இந்த வாரம் சின்ன பொண்ணு தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளாதாக கூறப்படுகிறது.
தங்களிடம் உள்ள காயினை பயன்படுத்தி எலிமினேஷனில் இருந்து தன்னையோ அல்லது தனக்கு விருப்பமான ஒருவரையோ காப்பாற்றிக் கொள்ளலாம். அவருக்கு பதில் வேறு ஒருவரை நாமினேட் செய்து கொள்ளலாம். 10 வது வாரம் வரை இந்த காயினுக்கு பவர் உண்டு. இந்த பவரை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும் என ஏற்கனவே பிக்பாஸ் கூறி விட்டார்.
காயினை கைப்பற்றும் டாஸ்கில் அனைவரும் தாமரை மற்றும் சின்ன பொண்ணுவிடம், நாங்கள் உங்களுக்காக தான் விளையாடுகிறோம் என கூறினார்கள். தற்போது சுருதி, இசைவாணி, வருண், பாவனி, நிரூப் ஆகியோரிடம் காயின்கள் உள்ளன. ஆனால் ஒருவர் கூட சின்ன பொண்ணுவை காப்பாற்ற அந்த காயினை பயன்படுத்தவில்லை.
அக்கா…அக்கா என பாசமாக பேசிக் கொண்டு இருந்தார்கள். ஆனால் ஒருவர் கூட தன்னை காப்பாற்றாமல், தங்களை காப்பாற்றிக் கொள்ள காயினை வைத்து கொண்டுள்ளனரே என சின்ன பொண்ணு அதிர்ச்சியில் உரைந்து போய் உள்ளார். சின்ன பொண்ணுவிற்கு நடந்ததை சற்றும் எதிர்பார்க்காத தாமரையும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.