முகத்தில் இருக்கும் கொழுப்பை நீக்க கன்னட சீரியல் நடிகை சேத்தனா ராஜ் செய்து கொண்ட பிளாஸ்டிக் சர்ஜரி அவரது உயிரையே குடித்து விட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வெறும் 21வயதே ஆன நடிகை பிரபலமாக வேண்டும் என நினைத்து செய்து கொண்ட Fat Free சிகிச்சை அவரது உயிருக்கே எமனாக மாறிவிட்டது மற்ற நடிகைகளுக்கும் பெரும் பாடமாக மாறுமா? என்கிற கேள்வியை எழுப்பி உள்ளது.
கன்னட நடிகை சேத்தனா ராஜ் மட்டுமில்ல, உலகளவில் பல நடிகர்கள் இந்த பிளாஸ்டிக் சர்ஜரியால் விபரீதத்திற்கு ஆளாகி உள்ளனர். சமீபத்தில், ரைசா வில்சனுக்கும் பெரிய பாதிப்பு ஏற்பட்டது. மேலும், அதிர்ச்சியுட்டும் வகையில் சில பிரபலங்களும் பிளாஸ்டிக் சர்ஜரிக்கு பலியாகி உள்ள சம்பவங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.
கன்னட நடிகை மரணம்
கன்னட டிவி நடிகை சேத்தனா ராஜ் தனது முகத்தில் இருக்கும் கொழுப்புகளை நீக்க மே 16ம் தேதி காலை பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிளாஸ்டிக் சர்ஜரியை மேற்கொண்டார். நேற்று மாலை அவரது நுரையீரலில் நீர் கோர்த்து படு மோசமான நிலையில், மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பரிதாபமாக பிரிந்தது.
மூக்கை அழகாக்க
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி ரஷ்ய மாடல் மரினா லெபேடேவா தனது மூக்கை அழகாக மாற்றிக் கொள்ள ஆசைப்பட்டு 4 ஆயிரம் பவுண்டு செலவு செய்து பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார். 31 வயதே ஆன மரினா தனது மூக்கை அழகாக மாற்ற நினைத்து செய்து கொண்ட ரைனோபிளாஸ்டி எனும் அறுவை சிகிச்சை அவரது உயிரை பறித்தது மாடலிங் செய்யும் பெண்களையும் பிரபல நடிகைகளும் அச்சத்தில் ஆழ்த்தியது.
அக்குள் வியர்வையை நிறுத்த
மெக்ஸிகோவை சேர்ந்த 23வயது இளம் மாடல் தனது அக்குளில் வியர்வை வரக் கூடாது என்பதற்காக ஸ்கின்பைல் க்ளினிக் எனும் மருத்துவமனையில் செய்து கொண்ட அறுவை சிகிச்சையில் நேர்ந்த குளறுபடி காரணமாக அவரது உயிர் கடந்த ஆண்டு ஜூலை 7ல் பிரிந்து அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
அமெரிக்க மாடல் மரணம்
கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி அமெரிக்க மாடல் அழகியான ஜோஸ்லின் கேனோ தனது பின்னழகை எடுப்பாக மாற்ற செய்து கொண்ட அறுவை சிகிச்சை காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது வெறும் 30 தான். இப்படி உலகம் முழுவதும் ஏகப்பட்ட மாடல் அழகிகளும் நடிகைகளும் பிளாஸ்டிக் சர்ஜரி, காஸ்மெடிக் சர்ஜரி உள்ளிட்டவை செய்யும் போது ஏகப்பட்ட பிரச்சனைகளுக்கும் அதிகபட்சமாக உயிரிழப்புகளையும் சந்தித்து வருகின்றனர்.
ரைசா முகம் வீங்கிச்சே
கடந்த ஆண்டு நடிகை ரைசா வில்சனின் முகமும் காஸ்மடிக் சர்ஜரிக்கு பிறகு ரொம்பவே கொடூரமாக வீங்கியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அந்த தனியார் மருத்துவமனை மருத்துவர் மீது நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸும் அனுப்பி இருந்தார் ரைசா வில்சன். பின்னர், பல கட்ட சிகிச்சைக்கு பிறகு அவரது முகம் பழையபடி திரும்பியது குறிப்பிடத்தக்கது.
பெண்களே உஷார்
சமந்தா, நயன்தாரா, ஸ்ருதிஹாசன், ஆலியா பாட் உள்ளிட்ட பல இந்திய நடிகைகள் இதுபோன்ற பிளாஸ்டிக் சர்ஜரிக்களை தொடர்ந்து செய்து வருகின்றனர். சிலருக்கு அது சில சமயங்களில் பெரும் ஆபத்தில் கொண்டு போய் முடிந்து வருகிறது. முடிந்த வரை மருத்துவமனை மற்றும் மருத்துவர்களின் தரத்தை பரிசோதனை செய்து விட்டு இதுபோன்ற ரிஸ்க்கை நடிகைகள் தேவை ஏற்பட்டால் தகுந்த பாதுகாப்புடன் எடுப்பது நலம்.
உடல் அழகை விட திறமையான நடிப்பை வெளிப்படுத்தினால் நிச்சயம் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை. நடிகைகளை போல ஆகிறேன் என்கிற பெயரில் பல இளம் பெண்களும் இதுபோன்ற ஆபத்துகளில் விழுந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.
Leave a Reply
View Comments