Malayagam
Home » நவம்பர் மாதத்தில் கவனமாக இருக்க வேண்டிய 5 ராசிகள்

நவம்பர் மாதத்தில் கவனமாக இருக்க வேண்டிய 5 ராசிகள்

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் கிரகங்கள் நகர்ந்து கொண்டே இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு கிரகம் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகர்வதை, கிரக பெயர்ச்சி என்று கூறுகிறோம்.

அந்த வகையில் 2021ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடக்கும் முக்கிய கிரகப்பெயர்ச்சிகள் என்னென்ன என்பதை பார்ப்போம். தீபாவளி, குரு பெயர்ச்சி போன்ற முக்கிய நிகழ்வுகள் இந்த மாதத்தில் நிகழ உள்ளன.

நவம்பர் 2, 2021 அன்று துலாம் ராசியில் புதன் பெயர்ச்சி

நவம்பர் 16, 2021 அன்று விருச்சிக ராசியில் சூரிய சஞ்சாரம்

நவம்பர் 18, 2021 அன்று பௌர்ணமி

நவம்பர் 21, 2021 அன்று கும்ப ராசியில் குரு பெயர்ச்சி

நவம்பர் 21, 2021 அன்று விருச்சிக ராசியில் புதன் பெயர்ச்சி

நவம்பர் 2 அன்று புதன், சூரியன், செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களின் சேர்க்கை நிகழ்கிறது. அதன் பின்னர் நவ 21ம் தேதி சூரியன், புதன், கேது ஆகிய கிரகங்களின் சேர்க்கை விருச்சிக ராசியில் நிகழ்கிறது.

இதுபோன்று பெரிய கிரகப் பெயர்ச்சிகளால் எந்த ராசிகளுக்கெல்லாம் சுப பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

​ரிஷப ராசி: உங்கள் ராசியில் ராகுவும், 7ல் கேது, ராசி அதிபதி சுக்கிரன் அஷ்டம ஸ்தானத்தில் இருக்கிறது.

புதன் பகவான் மூல திரிகோணத்தில் உச்சம் பெற்று 5ம் இடத்தில் சஞ்சாரம் செய்கின்றார். 6ல் செவ்வாய், சூரியன், யோக அதிபதி 9ம் இடத்தில் இருக்கிறார். 20ம் தேதி குரு பகவான் கர்ம ஸ்தானமான 10ம் இடத்திற்கு நகர்வார்.

உங்களின் ஆசை, விருப்பங்கள் அதிகரிக்கும். சில நேரங்களில் அதை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் நிதி நிலைமை சீராக இல்லாமை அல்லது சூழல் இன்மையால் வருத்தப்பட நேரிடும். இருப்பினும் அதை நினைத்து வருத்தப்பட வேண்டியதில்லை.

சனிபகவான் யோகமான இடத்தில் அமர்ந்திருப்பதால், தொழில், கர்மம் உங்களுக்கு முன்னேற்றம் தரக்கூடியதாக இருக்கும். தந்தை வகையில் உங்களின் தொழில் ஸ்தானம், தொழில் அமைப்பு பலம் பெறும்.

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குறிப்பாக வயிறு சார்ந்த இடங்களில் எரிச்சல், வலி போன்றவை வரக்கூடும். அதனால் உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. அஜீரனம் ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த விஷயங்களைக் கருத்தில் கொண்டால் இந்த நவம்பர் மாதம் அற்புதமாக அமையும்.

சந்திராஷ்டம நாட்கள் :7, 8, 9

​துலாம்: நவம்பர் மாத தொடக்கத்தில் உள்ள கிரக நிலையில் அடிப்படையில் இந்த துலாம் மாத ராசி பலன் கணிக்கப்பட்டுள்ளது.

உறவினர்கள் வகையில் தேவையற்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் பேச்சில் கவனம் தேவை. தம்பதி இடையே இருந்த மன கசப்புகள் நீங்கி அன்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

நண்பர்கள் மூலம் சில உதவிகள் கிடைக்கும். நல்ல திருப்பங்கள் கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான விஷயங்களில் நிதானம் தேவை. தந்தையின் தேவைகள் வகையில் உங்களுக்கு கூடுதல் செலவாக வாய்ப்புள்ளது.

வழிபாடு:

சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டு வரவும்.

​விருச்சிகம்:  தைரிய காரகனான செவ்வாய் அதிபதியாக கொண்ட விருச்சிக ராசி நேயர்களே. உங்கள் ராசி அதிபதி விரய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. வெளிநாடு, வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்புகள் ஏற்படலாம்.

கோபத்தைக் குறைத்துக் கொண்டு பொறுமையோடு செயல்படுவது அவசியம். சிலருக்கு கோபத்தால் பிரச்னைகளும், வீண் தடங்களும் ஏற்படும்.

மாத பிற்பகுதியில் குரு பெயர்ச்சி நிகழும் போது குருவின் பார்வை, ராசி நாதன் செவ்வாய்க்கு கிடைப்பதால் குடும்பத்திலும், பணியிடத்திலும் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். எதிரிகளை வெல்வீர்கள். நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். சுப காரியங்கள் சிறப்பாக நடக்கும்.

நிதி நிலை சிறப்பாக இருப்பினும், சூதாட்டம், ஆன்லைன் கேம், ரம்மி என விளையாடுவதில் அதிக இழப்பு ஏற்படும். வீண் செலவில் கவனம் தேவை.

உடல் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். சிலருக்கு உடல் பருமன் அதிகரிக்கும்.

கேதுவின் அமைப்பால் வீண் அலைச்சல்களும், உடல் அசதியும் ஏற்படும். புதிய திட்டங்களில் முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது.

சந்திராஷ்டம தினங்கள்: 21, 22, 23

கும்பம்: கும்ப ராசிக்கு நன்மையும், சில சங்கடங்களும் கலந்த மாதமாக இருக்கும். ராசிக்கு 4ல் ராகு இருப்பதால் மகிழ்ச்சி ஏற்படும். நண்பர்கள் வகையில் ஆதாயம் பெறுவீர்கள்.

தொழில், வியாபாரத்தில் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். அபிவிருத்தி செய்வதற்கான பல வாய்ப்புகள் தேடி வரும். அதே சமயம் நீங்கள் நிதானமாக செயல்படுவது அவசியம். பல விஷயங்களைப் படித்திருந்தாலும், அதை செயல்படுத்தும் போது சில தடுமாற்றங்கள் ஏற்படலாம்.

மாத முற்பகுதியில் சூரியன் – கேது சேர்ந்திருப்பதால் தொழிலில் தடுமாற்றம் இருக்கும்.பிற்பகுதியில் சூரியன் 10ம் இடத்திற்கு வரும் போது தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். விட்டுக் கொடுத்துச் செல்வது அவசியம். குடும்பத்தில் பொறுமையுடன் செயல்படுவது அவசியம்.

குருவின் பெயர்ச்சி சாதகமானதக இருந்தாலும், எதிரியாக இருந்தாலும் அவரை மதித்து, சரியான திட்டமிடல், திறனுடன் எந்த ஒரு காரியங்களிலும் இறங்குவது நல்லது.

​மீனம்: மீன ராசியினர் பொதுவாக கவனமாக இருக்க வேண்டிய மாதம். குறிப்பாக உங்கள் பேச்சில் நிதானமும், அடக்கமும் அவசியம். ஏனெனில் நீங்கள் ஒன்று நினைத்து பேசினால், அது வேறு வகையில் மற்றவர்களால் புரிந்து கொள்ளப்படும் என்பதால் நிலைமை பிரச்சினைக்குரியதாக மாறும்.

குடும்ப விஷயத்தில் கருத்து தெரிவிப்பதில் வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசவும்.

பெண்களுக்கு ஆடை, ஆபரணம் வாங்கும் யோகம் உண்டு. தாய் சார்ந்த விஷயங்களில் இருந்த பிரச்னைகள் விலகும். நீங்கள் முன்னெடுக்கும் செயல்களில் நல்ல வெற்றியைப் பெற முடியும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உணவு விஷயத்தில் கவனம் தேவை.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

Most discussed