Save 20% off! Join our newsletter and get 20% off right away!

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிக்கான நவம்பர் மாத ராசி பலன் 2021

நவம்பர் 2021 மாத ராசி பலன்

மேஷம் ராசி நவம்பர் மாத பலன்: Aries November Month Horoscope

மேஷ ராசிக்கு 2021 நவம்பர் மாதம் மிகவும் சிறப்பான பலன்களைப் பெறக்கூடிய மாதமாக அமையப் போகிறது. அதிலும் குறிப்பாக இந்த மாதத்தில் நடக்க உள்ள குரு பெயர்ச்சியால் அதிக அதிர்ஷ்டத்தைப் பெறப்போகும் ராசிகளில் முதலிடத்தில் மேஷ ராசி இருக்கப் போகிறது.

அதுமட்டுமல்லாமல் உங்கள் ராசி அதிபதி செவ்வாய் நல்ல யோகத்தைத் தரக்கூடிய அனுகூல நிலையில் இருப்பதோடு, சூரியனின் பார்வை பலன் உங்களுக்கு சிறப்பான பலன் தரக்கூடியதாக இருக்கும்.
உங்களின் நிதி நிலைமை சீராக இருக்கும். நீங்கள் நிர்ணயித்த இலக்கை அடையும் நல்ல வாய்ப்புகள் அமைவதோடு, நீங்கள் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். உங்களின் வீண் செலவுகள் குறையும் என்பதால் சேமிப்பு அதிகரிக்கும்.

குடும்பத்தில் நிம்மதியும், வீடு, மனை சார்ந்த விஷயங்களிலும், வழக்கு சார்ந்த விஷயங்களில் நல்ல பலன்கள் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் நிம்மதியும், நல்ல செய்திகளும் கிடைக்கும்.

சூரியனின் பார்வை சிறப்பாக இருப்பதால் அரசு வகையில் நற்பலன்கள் கிடைக்கும்.

தொழிலிலிருந்த தடைகள், பிரச்னைகள் நீங்கி சிறப்பாகவும், முன்னேற்றத்தைத் தரக்கூடிய வகையில் சனியின் அமைப்பு இருக்கிறது. உத்தியோகத்தில் மேலதிகாரி, சக ஊழியர்கள் மூலம் அனுகூலமான பலன் கிடைக்கும். பெண்களுக்கு நிதி சார்ந்த விஷயங்களில் அனுகூலம் உண்டாகும்.

வழிபாடு:
முருகப் பெருமானை வழிபட்டு வரவும்.
சந்திராஷ்டம நாட்கள்:5, 6, 7

ரிஷப ராசி நவம்பர் மாத பலன்: Taurus November Month Horoscope

உங்கள் ராசியில் ராகுவும், 7ல் கேது, ராசி அதிபதி சுக்கிரன் அஷ்டம ஸ்தானத்தில் இருக்கிறது. புதன் பகவான் மூல திரிகோணத்தில் உச்சம் பெற்று 5ம் இடத்தில் சஞ்சாரம் செய்கின்றார். 6ல் செவ்வாய், சூரியன், யோக அதிபதி 9ம் இடத்தில் இருக்கிறார். 20ம் தேதி குரு பகவான் கர்ம ஸ்தானமான 10ம் இடத்திற்கு நகர்வார்.

உங்களின் எதிரிகள் அல்லது பங்குதாரர்கள், துணை போன்றோருக்கு நடக்கும் பல விஷயங்கள் தெரிந்தும் தனக்கு சொல்லவில்லையே என்ற ஆதங்கம் உண்டாகும். இருப்பினும் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம் என்னவெனில் உங்களின் புத்தி மிகவும் சிறப்பாக வேலை செய்யும். எந்த தடங்கல் ஏற்பட்டாலும் அதை முறியடிக்கக்கூடிய புத்திக்கூர்மையுடன் செயல்படுவீர்கள்.

உங்களின் ஆசை, விருப்பங்கள் அதிகரிக்கும். சில நேரங்களில் அதை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் நிதி நிலைமை சீராக இல்லாமை அல்லது சூழல் இன்மையால் வருத்தப்பட நேரிடும். இருப்பினும் அதை நினைத்து வருத்தப்பட வேண்டியதில்லை.

சனிபகவான் யோகமான இடத்தில் அமர்ந்திருப்பதால், தொழில், கர்மம் உங்களுக்கு முன்னேற்றம் தரக்கூடியதாக இருக்கும். தந்தை வகையில் உங்களின் தொழில் ஸ்தானம், தொழில் அமைப்பு பலம் பெறும்.

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குறிப்பாக வயிறு சார்ந்த இடங்களில் எரிச்சல், வலி போன்றவை வரக்கூடும். அதனால் உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. அஜீரனம் ஏற்பட வாய்ப்புள்ளது.

சந்திராஷ்டம நாட்கள் :7, 8, 9

சுக்கிர பெயர்ச்சி (அக் 30) – தனுசுவில் சுக்கிரன் இருப்பதால் அதிர்ஷ்டம் பெறும் 6 ராசிகள்

மிதுன ராசி நவம்பர் மாத பலன்: Gemini November Month Horoscope

மிதுன ராசிக்கு இதுவரை தடைப்பட்ட காரியங்கள் அல்லது நடக்கவில்லையே என ஏங்கிக் கொண்டிருந்த காரியங்கள் விரைவாக நடக்கும்.

அதிலும் இந்த மாதத்தில் நடக்கும் குரு ராசிக்கு 9ம் இடத்திற்கு செல்வதால் அதிர்ஷ்டம் கைகூடும். சில நேரங்களில் உங்களின் ஆரோக்கியம், துரதிர்ஷ்டங்கள் நீங்கக்கூடிய காலம். சரியான மருத்துவம் கிடைக்கும். கிடைக்க வேண்டிய மதிப்பு, மரியாதை, பணம் கிடைக்கும்.

8ல் குரு, சனி இருந்ததால் பல பிரச்சினைகள் ஏற்பட்ட நிலையில் நிதிப்பிரச்னை அதிகமாக இருந்திருக்கும். தற்போது குரு பெயர்ச்சியால் உங்களில் நிதி நிலைமை சீராக முன்னேற்றமடையும். 7ல் சுக்கிரன் இருப்பதால் குடும்பத்தில் இருந்த சலசலப்பு, பகை உணர்வு நீங்கி அன்பு அதிகரிக்கும். திருமண யோகம் கூடி வரும்.

ராசிநாதன் 5ல் இருப்பதால் யோகம் தான். கல்வி தொடர்பான விஷயங்களில் வெற்றியும், பேச்சு, கலைத்துறையில் இருப்பவர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும். தொழில் செய்யக்கூடிய குறிப்பாக ஆன்லைன் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகளும், முன்னேற்றமும் உண்டாகும். தேக்க நிலை மாறும்.

சந்திராஷ்டம நாட்கள் :9, 10, 11, 12

கடக ராசி நவம்பர் மாத பலன்: Cancer November Month Horoscope

தாய் காரகனான சந்திரனை அதிபதியாக கொண்ட, சேவை செய்வதில் ஆனந்தம் கொண்ட ராசி கடகம். உங்களுக்கு இதுவரை இருந்த கடினமான சூழல், தடைகள் நீங்கி நன்மை ஏற்படும். மிகவும் திறமைசாலிகளாக விளங்குவீர்கள்.

இந்த மாதத்தில் வரவுக்கு மீறிய செலவு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் செலவு விஷயத்தில் கவனம் தேவை. இருப்பினும் நிதி பிரச்னைகள் பெரியளவு ஏற்படாது. உங்களின் பேச்சாற்றல் சிறக்கும். புகழ் ஏற்படும். உங்களின் சேவை எண்ணம் பாராட்டுக்குரியதாக இருக்கும்.

குரு பெயர்ச்சி 2021 அதிர்ஷ்ட பலன் பெறும் 6 ராசிகள் – உங்கள் ராசியும் இருக்கா தெரிந்து கொள்ளுங்கள்!

உத்தியோகத்தில் இருப்பவர்களின் இலக்கை எட்டுவதில் சிரமம் ஏற்படும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. சிலருக்கு தடைப்பட்ட கல்வி தொடர்பான முயற்சிகள் வெற்றி தரும். பொறுமையின்மை ஏற்படும் என்பதால் உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாக இருப்பீர்கள்.

சிலநேரங்களில் உங்களின் ரகசியங்களை காப்பாற்ற மறந்துவிடுவீர்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாக வாய்ப்புள்ளது.

குரு பகவான் 8ம் இடத்தில் இருப்பதால் எதற்கெடுத்தாலும் வீண் விவாதங்கள், அதிக பேச்சு கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை. உங்களுக்கு பணம் வந்து சேர தாமதமாகலாம்.

அஷ்டம சனி களத்திர ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொறுமையின்றி நடந்து கொள்வீர்கள். உங்களின் ஆரோக்கியம் பெருகும்.

குரு தன பாவம், சுக பாவத்தையும் பார்ப்பதால் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். நல்ல வீடு, மனை அமைய வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் மேம்படும்.

சந்திராஷ்டம நாட்கள் : 12, 13, 14

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.