ஒவ்வொரு டிவி சேனலும் தங்களின் சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல்களின் ரேட்டிங்கை அவ்வப்போது வெளியிட்டு, அதில் முதல் இடம் பிடித்த சீரியல் எது என்ற பட்டியலையும் வெளியிட்டு வருகின்றன. இதில் சன் டிவி, விஜய் டிவி இடையே கடும் போட்டி நிலவுகிறது.
விஜய் டிவி தான் அடிக்கடி டாப் ரேட்டிங்கை பெற்ற சீரியல்களின் பட்டியல், அவைகள் பெற்ற ரேட்டிங் ஆகியவற்றை வெளியிட்டு வருகிறது.
சமீபத்தில் விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகும் சீரியல்களின் பட்டியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முதலிடத்தில் உள்ளதாக கூறப்பட்டது.
விஜய் டிவி.,யில் அதிக ரேட்டிங்கை பெற்று, முதலிடத்தை பிடிக்க பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாரதி கண்ணம்மா சீரியல்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
சமீபத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் லட்சுமி அம்மா இறந்த சீன் ஒரு வாரம் ஒளிபரப்பப்பட்டது. சென்டிமென்ட், சஸ்பென்ஸ் அதிகமாக இருந்தாலும் அதையும் சினிமாதனம் இல்லாமல் இயல்பாக நடப்பதை போல் காட்டியிருந்தனர். நிஜத்தில் நடப்பதை போன்றே சடங்குகள் நடத்தப்பட்டன.
இதை பார்த்து விட்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் டிவி ரேட்டிங், எங்கேயோ சென்று விட்டது. டிவி ரேட்டிங்கில் அதிகபட்சமாக 9.6 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை பிடித்தது.
இதற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்தனர். இதையடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு இருக்கும் வரவேற்பு அதிகரித்தது.
இந்நிலையில் லேட்டஸ்டாக விஜய் டிவி மட்டுமல்ல, தமிழ்நாட்டிலேயே மெகா சீரியல்களில் அதிக ரேட்டிங்கை பெற்று, முதலிடம் பிடித்த டிவி சீரியல் எது என்ற விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலேயே முதலிடத்தை பிடித்துள்ள சீரியல் வேறு எதுவும் இல்லை, விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் தானாம்.
இதுவரை இல்லாத அளவாக முதல் முறையாக பாரதி கண்ணம்மா சீரியல் 11.6 டிவி ரேட்டிங்கை பெற்றுள்ளது.
இது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்கள் இந்த டீமிற்கு வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.
பாரதி கண்ணம்மா சீரியலில் சமீபத்தில் தான் ரோஷினி ஹரிபிரியனுக்கு பதில் வினுஷா கண்ணம்மா ரோலில் மாற்றப்பட்டார்.
ரோஷினி தான் சீரியல் முழுவதும் நடிக்க வேண்டும். புதிய கண்ணம்மாவை ஏற்க முடியவில்லை என பலர் கூறி வந்தவர். புதிய கண்ணம்மாவின் வருகையால் இந்த சீரியலின் டிஆர்பி பெரிய அளவில் சரியும் என பலர் வேதனை தெரிவித்தனர்.
புதிய கண்ணம்மாவின் வருகைக்கு பிறகும் விறுவிறுப்பு, த்ரில்லிங் குறையாமல் இந்த சீரியலை கொண்டு சென்றனர். இதன் பலனாக அனைவரின் கருத்தையும் பொய்யாக்கி இந்த சீரியல் நம்பர் ஒன் இடத்திற்கு வந்துள்ளது. இதனை பாரதி கண்ணம்மா டீம் கொண்டாடி வருகின்றனர்.
Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.