Save 20% off! Join our newsletter and get 20% off right away!

மீனா, தனத்தை தொடர்ந்து கர்ப்பமாக இருக்கிறாரா பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை?

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இந்த சீரியலுக்கு என மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளனர். கூட்டுக் குடும்ப வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் விஜே சித்ரா நடித்து வந்தார். அவர் குடும்ப பிரச்சனை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவருக்கு பதிலாக தற்போது காவியா அறிவுமணி நடித்து வருகிறார்.

ஆரம்பத்தில் இந்த ரோலுக்கு இவர் செட்டாகவில்லை என விமர்சனங்கள் எழுந்தாலும் தற்போது பர்பெக்ட்டாக மேட்ச் ஆகிவிட்டார்.

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீனா முதலில் குழந்தை பெற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து அடுத்ததாக தனம் சமீபத்தில் குழந்தை பெற்றுக் கொண்டார்.

இந்த நிலையில் காவியா கர்ப்பமாக இருக்கிறார் என சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

ஆனால் இது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கான புகைப்படம் அல்ல. காவியா அறிவுமணி டாம் செர்ரி என்ற புதிய வெப்சைட் தொடர் ஒன்றில் நடிக்கிறார்.

அந்த சீரியலில் தான் இவர் கர்ப்பமாக இருப்பது போல நடிக்கிறார். அது குறித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.