இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொருவருமே தனது விதியுடன் பிறந்ததாக நம்பப்படுகிறது. ஒருவருக்கு என்ன நடக்கும், எப்போது நடக்கும் என்பது எல்லாமே முன்பே முடிவு செய்யப்பட்டது.
இதில் ஒருவரது திருமண விஷயமும் அடங்கும். சிலர் சரியான வயதில் திருமணம் செய்து கொள்வார்கள், இன்னும் சிலர் திருமணத்தில் தாமதப்படுத்துவார்கள் அல்லது தங்களின் வாழ்க்கைத் துணையைக் கண்டுபிடிக்க சிறிது தாமதம் ஆகும்.
ஜோதிடத்தின் படி, சில ராசிக்காரர்கள் தங்கள் திருமணத்தில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. எங்கு திருமணம் நடந்தால் சுதந்திரம் பறிபோய்விடுமோ என்று எண்ணத்தால், அவர்கள் வழக்கமாகவே தாமதமாக திருமணம் செய்ய விரும்புகிறார்கள்.
ஆகவே தான் அவர்களின் திருமணம் தாமதமாக நடக்கிறது. இப்போது எந்த ராசிக்காரர்களுக்கு அவ்வளவு எளிதில் திருமணம் நடக்காது என்பதைக் காண்போம்.
மேஷம் – மேஷ ராசிக்காரர்களின் திருமணம் பெரும்பாலும் தாமதமாகவே நடக்கும். ஏனெனில் இவர்கள் திருமண விஷயத்தில் தங்கள் மனநிலையை மிக எளிதாக ஏற்படுத்தமாட்டார்கள். இந்த ராசிக்காரர்கள் வழக்கமாக தங்களின் வாழ்க்கைத் துணையை மிகவும் தாமதமாகவே பெறுவார்கள். ஒருவேளை சரியான நேரத்தில் கிடைத்தாலும், திருமணம் செய்வதற்கு நேரம் எடுத்துக் கொள்வார்கள். இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையை சுதந்திரமாக வாழ விரும்புகிறார்கள். அதில் யாருடைய தலையீடும் இருக்கக்கூடாது என்று நினைப்பார்கள்.
மிதுனம் – மிதுன ராசிக்காரர்கள் பெரும்பாலும் தாமதமாகவே திருமணம் செய்து கொள்வார்கள். இவர்களுக்கு திருமணம் செய்ய ஆசை இருக்கும். ஆனால் பல காரணங்களால் அது தடைப்பட்டுக் கொண்டே இருக்கும். இந்த ராசிக்காரர்கள் தங்கள் தொழில் பற்றி மிகவும் லட்சியமாக இருப்பார்கள்.
விருச்சிகம் – விருச்சிக ராசிக்காரர்கள் அவ்வளவு எளிதில் திருமணம் செய்து கொள்ளமாட்டார்கள். இவர்கள் முதலில் தங்கள் வாழ்க்கையில் கவனம் செலுத்துவார்கள். பின்னரே திருமணத்தைப் பற்றி சிந்திப்பார்கள். மேலும் இந்த ராசிக்காரர்கள் தங்களுக்கு பொருத்தமான வாழ்க்கைத் துணையைக் கண்டுபிடிக்க அதிக நேரத்தை எடுத்துக் கொள்வார். இதனாலேயே இவர்களுக்கு திருமணம் செய்ய தாமதமாகிறது.
தனுசு – தனுசு ராசிக்காரர்கள் தங்கள் சுதந்திரத்தை விரும்புவார்கள் மற்றும் அவர்கள் அதில் சமரசம் செய்யமாட்டார்கள். மேலும் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் தலையிடாத மற்றும் அவர்களை நன்கு புரிந்து கொள்ளும் ஒரு துணையையே தேடுவார்கள். இதன் காரணமாகவே இவர்கள் தங்களுக்கான வாழ்க்கைத் துணையைக் கண்டுபிடிக்க தாமதமாகி, திருமணமும் தாமதமாகிறது.
கும்பம் – கும்ப ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை நன்றாகவே இருக்கும். ஆனால் இவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை தேர்வு செய்ய தான் நேரம் எடுக்கும். இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை மிகுந்த கவனத்துடன் தேர்வு செய்வார்கள். இதனாலேயே இவர்கள் திருமணம் செய்து கொள்ள அவசரப்படுவதில்லை.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.
Leave a Reply
View Comments