HomeசினிமாCinema Newsதிருமணம் ரத்தான நாளே 17 வயது சிறுமி தற்கொலை

திருமணம் ரத்தான நாளே 17 வயது சிறுமி தற்கொலை

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த அமானிமல்லாபுரத்தை சேர்ந்தவர் வினோத்குமார். இவரது மகள், உமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 17.

இவர் ப்ளஸ் டூ முடித்துவிட்டு வீட்டில் இருந்தார். இந்த நிலையில், நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் சந்தூர் பகுதியை சேர்ந்த வாலிபருக்கும், சிறுமிக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் ஏற்பாடு செய்தனர்.

- Advertisement -

இதனை அறிந்த போச்சம்பள்ளி போலீசார் மற்றும் சைல்டு லைன் அமைப்பினர் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

பின்னர் சிறுமியை பெற்றோர் சொந்த ஊரான அமானிமல்லாபுரத்திற்கு அழைத்து வந்தனர். அதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் சிறுமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

- Advertisement -

தகவல் அறிந்த மாரண்டஅள்ளி போலீசார் தற்கொலை செய்துகொண்ட சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து பெற்றோரிடம் விசாரணை செய்த போது சிறுமி வயிற்று வலி காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறி உள்ளனர்.

சிறுமிக்கு குழந்தை திருமணம் செய்து வைக்க முயன்ற அன்றே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளதால், சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைக்க முயற்சி செய்ததால் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

RELATED ARTICLES

Most Popular