Mon, Dec5, 2022

#Trending

வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 வருவது உறுதி…ஆனால் ஹீரோ சிவகார்த்திகேயன் இல்லை.. இயக்குனர் அதிரடி

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். பொன்ராம் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்திருந்தார்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சிவகார்த்திகேயன் சூரி காம்பினேஷன் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

இந்த நிலையில் தற்போது பொன்ராம் பதிவிட்டுள்ள ஒரு பதிவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் உருவாவது உறுதி. சிவகார்த்திகேயன் சார் Maturity ஆகிவிட்டார். ஆகையால் இளம் கதாநாயகர்களை வைத்து படத்தை எடுப்போம் என தெரிவித்துள்ளார்.

இதனால் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இரண்டாம் பாகத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி பதிலாக நடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

#Celebrities