Save 20% off! Join our newsletter and get 20% off right away!

மோசமான சம்பவத்தால் வேதனையில் பூஜா ஹெக்டே

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பிரபலமாக இருக்கும் பூஜா ஹெக்டே கைவசம் தற்போது பல திரைப்படங்கள் இருக்கிறது.

அதில் அவர் தற்போது இரண்டு பாலிவுட் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் மும்பைக்கு சென்று திரும்பும் போது சந்தித்த மோசமான சம்பவத்தை தன்னுடைய சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.

அவர் அந்த பதிவில் கூறியிருப்பதாவது, மும்பையில் இருந்து புறப்படும் இன்டிகோ விமானத்தில் நான் பயணித்தேன். அப்போது அதன் ஊழியர் விபுல் நக்ஷே எங்களிடம் நடந்து கொண்ட முறை எங்களுக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது.

அவர் எங்களிடம் காரணமே இல்லாமல் மிகவும் திமிராகவும், எங்களை அச்சுறுத்தும் வகையிலும் நடந்து கொண்டார். இது போன்ற செயலை நாங்கள் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. அன்று நடந்த சம்பவம் எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது.

பொதுவாக இதுபோன்ற பிரச்சினைகள் குறித்து நான் எப்போதும் சோஷியல் மீடியாவில் கூறுவது கிடையாது. ஆனால் அந்த பயணத்தின் போது எங்களுக்கு நடந்த சம்பவம் உண்மையிலேயே பயங்கரமாக இருந்தது என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அவருடைய இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். மேலும் சில ரசிகர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இதுகுறித்து புகார் அளியுங்கள் என்றும் பூஜாவுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.