இயக்குநர் வினயன் இயக்கத்தில் உருவாகி வரும் வரலாற்று படத்தில் திருவாங்கூர் மகாராணியாக நடிகை பூனம் பஜ்வா நடித்து வருகிறார்.
‘பத்தொன்பதாம் நூற்றாண்டு’ எனும் பெயரில் இயக்குநர் வினயன் இயக்கி வரும் படத்தில் பூனம் பஜ்வா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவரது ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி உள்ளது.
கேரள ராணி கெட்டப்பில் வெறும் வேட்டியை மட்டும் கட்டிக் கொண்டு படுகவர்ச்சியாக கதிகலங்க விட்டுள்ளார் பூனம் பஜ்வா.
2005ம் ஆண்டு வெளியான தெலுங்கு படமான மொடட்டி சினிமா மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூனம் பஜ்வா. தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் தொடர்ந்து நடித்து கலக்கி வருகிறார்.
2008ம் ஆண்டு இயக்குநர் ஹரி இயக்கத்தில் வெளியான சேவல் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை பூனம் பஜ்வா நடிகர் ஜீவாவுடன் இணைந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.
துரோகி, ஆம்பள, ரோமியோ ஜூலியட், அரண்மனை 2, முத்தின கத்தரிக்காய், குப்பத்து ராஜா உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ஹீரோயின் கதாபாத்திரம் கிடைக்காத நிலையில், கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார் நடிகை பூனம் பஜ்வா. கடைசியாக ஜிவி பிரகாஷின் குப்பத்து ராஜா படத்தில் நடித்திருந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட கவர்ச்சி போட்டோக்களை களமிறக்கி வைரலாக்கி வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் க்யூட் மற்றும் ஹாட் போட்டோக்களை பதிவிட்டு வைரலாக்கி வரும் நடிகை பூனம் பஜ்வாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2.5 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிதாக நடித்து வரும் மலையாள திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கையும் நடிகை பூனம் பஜ்வா வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் வினயன் இயக்கத்தில் உருவாகி வரும் பத்தொன்பதாம் நூற்றாண்டு எனும் மலையாள வரலாற்று படத்தில் திருவாங்கூர் மகாராணியாக நடித்து வருகிறார் நடிகை பூனம் பஜ்வா. கவர்ச்சி பொங்கும் கேரளத்து மகாராணி கெட்டப்பில் இருக்கும் தனது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வாழ்த்துக்களை அள்ளி வருகிறார்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.
Leave a Reply
View Comments