HomeசினிமாBiggBossபிக் பாஸையே கலாய்த்த பிரியங்கா.. ரசிகர்கள் ரெஸ்பான்ஸ் இதுதான்

பிக் பாஸையே கலாய்த்த பிரியங்கா.. ரசிகர்கள் ரெஸ்பான்ஸ் இதுதான்

பிக் பாஸ் வீட்டில் பிரியங்கா பிக் பாஸையே கலாய்க்க தொடங்கி இருக்கிறார். அது ஷோவை ஜாலியாக்கி இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

விஜய் டிவி தொகுப்பாளர் பிரியங்கா பிக் பாஸ் 5 வீட்டுக்குள் போட்டியாளராக வந்திருக்கும் நிலையில் முதல் நாளிலேயே அட்ராசிட்டியை தொடங்கிவிட்டார்.

- Advertisement -

அவர் மற்ற போட்டியாளர்கள் உடன் செம ஜாலியாக பேசி வருவது மட்டுமின்றி பிக் பாஸையே கலாய்க்கும் வகையில் கேமரா முன்பு பேசி வருவதும் பிக் பாஸ் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

நேற்றைய எபிசோடில் “நாங்க 4 பேர் 20 பேருக்கு சமைக்க வேண்டும், அதற்கு இவ்ளோ சின்ன சட்டி கொடுத்தா எப்படி? அதனால் மற்றவர்கள் எங்கள் மீது கோபப்பட்டு நாமினேட் செய்ய வேண்டும், அது தானே உங்கள் ஆசை? அப்படி நீங்க வேறு பாத்திரம் கொடுக்கவில்லை என்றால் பாத்ரூம் பக்கெட் இருக்கிறது அதை வைத்து சமைப்பேன் என கேமரா முன்புபேசினார் பிரியங்கா.

- Advertisement -

மேலும் பிக் பாஸை பார்த்து பயப்படாதீங்க, அவரால் என்ன பண்ண முடியும், நேராக உள்ளே வர முடியுமா என கேட்டு இருக்கிறார் பிரியங்கா. இப்படி பிரியங்கா கேமரா முன்பு பிக் பாஸை ஏராளமாக கலாய்த்து வருகிறார்.

இப்படி அவர் செய்து வருவது பார்க்க நன்றாக தான் இருக்கிறது என ரசிகர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

RELATED ARTICLES

Most Popular