HomeசினிமாCinema Newsதனுஷ் வேண்டவே வேண்டாம்.! ஒதுங்கிய பிரியங்கா மோகன்.!

தனுஷ் வேண்டவே வேண்டாம்.! ஒதுங்கிய பிரியங்கா மோகன்.!

தமிழ் சினிமாவில் நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியங்கா அருள் மோகன். இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக சூர்யாவிற்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்திருந்தார். அதன்பின் மீண்டும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்று மாபெரும் வசூலை செய்தது. இந்த வெற்றிகளை தொடர்ந்து நடிகை பிரியங்கா மோகன் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம்ரவி நடிக்கும் ஒரு படத்திலும் நடிக்க கமிட்டாகி உள்ளதாக தகவல்கள் வெளியானது.

- Advertisement -

இதனையடுத்து, இயக்குனர் அருண் மாதேஷ் வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ள “கேப்டன் மில்லர்” படத்தில் பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்கவிருந்ததாகவும் ஒரு தகவல் பரவி வந்தது. ஆனால் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

- Advertisement -

இந்த படத்தில் நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றபோது, பிரியங்கா மோகன் சில காரணங்களால் படத்தில் நடிக்கவில்லை என்று கூறிவிட்டாராம்.

ஆனால், தனுஷ் படத்திற்கு நோ சொல்லிவிட்டு தெலுங்குத் திரைப்படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகி உள்ளதாகவும் செய்திகள் ஒன்று இணையத்தில் உலாவி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் தனுஷ் படத்திற்கு நோ சொல்லிவிட்டு தெலுங்கு படத்திற்கு எஸ்-ஆ என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

RELATED ARTICLES

Most Popular