புஷ்பா 2 படப்பிடிப்பை விரைவில் தொடங்கவுள்ள நடிகர் அல்லு அர்ஜுன், தற்போது தான்சானியாவில் தனது குடும்பத்துடன் விடுமுறையில் இருக்கிறார்.
அல்லு அர்ஜுனின் மனைவி சினேகா, செரெங்கேட்டி தேசிய பூங்காவில் எடுக்கப்பட்ட தங்கள் குடும்ப படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் 4 பேரும் கேமராவுக்கு போஸ் கொடுத்தபடி நின்றனர்.
திரை வாழ்க்கையைப் பொறுத்தவரை அல்லு அர்ஜுன் அடுத்ததாக புஷ்பா: தி ரூல் படத்தில் நடிக்கிறார். இது 2021-ஆம் ஆண்டு வெளியான புஷ்பா: தி ரைஸ் திரைப்படத்தின் தொடர்ச்சியாகும்.
முதல் பாகத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில், ஜகதீஸ் பிரதாப் பண்டாரி, சுனில், ராவ் ரமேஷ், தனஞ்சயா, அனசூயா பரத்வாஜ், அஜய், அஜய் கோஷ், ஸ்ரீதேஜ், சத்ரு மற்றும் பலர் நடித்திருந்தனர்.
அந்தப் படத்தை சுகுமார் இயக்கியிருந்தார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்த புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக தெலுங்கில் அறிமுகமானார் ஃபகத் ஃபாசில்.
தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை அல்லு அர்ஜுனின் மனைவி அல்லு சினேகா ரெட்டி. இவர்களுக்கு அல்லு அஹான் என்ற மகனும் அல்லு அர்ஹா என்ற மகளும் இருக்கின்றனர்.
Leave a Reply
View Comments