ராஜா ராணி 2 இன்றைய எபிசோட்டில் சந்தியா சரவணன் மற்றும் செந்தில் இயக்கத்தில் பார்வதியை தீவிரவாத கும்பல் கடத்தி இருக்கு விஷயத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைகின்றனர்.
பிறகு செந்தில் கோவிலில் குண்டு வெடிக்கப் போகிறது எனத் தெரிந்துதான் எல்லோரையும் கூட்டி வந்திங்கலா என கேட்க ஆமாம் என சொன்னதும் வாங்க உடனே அப்பா அம்மாவை கூட்டிட்டு உடனே கிளம்பலாம் என கூறுகிறார் செந்தில். சரவணன் அதுதான் சரி என்று சொல்ல சந்தியா நீங்க உங்க குடும்பத்த காப்பாத்த நினைக்கிறது தப்பு இல்ல ஆனா இங்கே இருக்கிற எல்லோரையும் நினைத்துப் பாருங்கள்.
நாம பார்வதியையும் காப்பாற்றியாக வேண்டும். அதே சமயம் தென்காசியில் இன்னொரு குண்டு வெடிப்பு சம்பவம் நடக்காமல் தடுத்தாக வேண்டும். அதற்கு இப்போது நாம் எல்லோரும் ஒன்றிணைந்து வேலை பார்க்க வேண்டும் என கூறுகிறார்.
முதலில் இந்த கூட்டத்தில் நாம பார்வதியைத் தேடி கண்டுபிடிக்க வேண்டும். அதை செய்து விட்டால் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை தடுத்துவிடலாம் என கூற செந்தில் சரவணன் என இருவரும் பார்வதியை தேடி அலைகின்றனர். சந்தியாவும் ஒரு பக்கம் பார்வதியைத் தேடி அலைகிறார்.
தீவிரவாத கும்பல் பார்வதியை காரில் அழைத்து வந்து நிற்க அப்போது செல்வம் காருக்குள் சென்று பார்வதியிடம் நீ மட்டும் சாக போறது இல்ல நீ குடும்பத்தோட சாகப் போற உன் வீட்டில் இருக்க எல்லோரும் கோவிலுக்கு வந்து இருக்காங்க என கூறுகிறார்.
மேலும் நான் சொல்லும்போது பார்வதியை கூட்டத்தில் இறக்கி விடுங்க என கூறுகிறார். அதன்பிறகு கோவில் கோபுரத்தின் மேலே சென்று அமர்ந்து கூட்டத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
ஒரு பக்கம் சிவகாமி பார்வதி போலவே இருக்கும் பெண்ணை பார்த்து பார்வதி என ஓடி அவரின் கையைப் பிடித்துப் பார்க்க அது பார்வதி இல்லை. இவர்களும் சந்தியா சரவணன் எங்கே எனத் தெரியவில்லை என ஒருபக்கம் தேடுகின்றனர். இந்த நேரத்தில் செல்வம் பார்வதியை கூட்டத்தில் இறக்கி விடுமாறு கூறுகிறார்.
மயில் ஆட்டம் ஆடும் உடையில் பார்வதியை கூட்டத்துக்குள் இறக்கிவிட அவர் எல்லோரும் எங்கம்மா இருக்கீங்க யாராவது என்ன கண்டுபிடிக்க என அழுதவாறு பார்வதி கூட்டத்துக்குள் நடந்து வருகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.