HomeசினிமாCeleb Newsரஜினி ரசிகாஸ், ப்ளீஸ் இந்த நியூஸை படிக்காதீங்க

ரஜினி ரசிகாஸ், ப்ளீஸ் இந்த நியூஸை படிக்காதீங்க

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த படம் வெற்றி நடை போடுகிறது என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் வீடியோ வெளியிட்டுள்ளது.

படத்தை பார்த்த ரஜினி ரசிகர்களோ, தலைவர் என்னா ஸ்டைலா இருக்கார், எப்படி குறும்பு பண்றார், அய்யோ அழுகிறாரே என்று பலவிதமாக ஃபீல் பண்ணுகிறார்கள்.

- Advertisement -

இப்படி ஒரு ஸ்டைலான படத்தை கொடுத்ததற்காக சிறுத்தை சிவாவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம் அண்ணாத்த படம் டிவி சீரியல் போன்று இருப்பதாக சினிமா ரசிகர்கள் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களால் என்ன முடியுமோ அதை சிறப்பா செஞ்சுட்டீங்க சிவா என்று கிண்டல் செய்கிறார்கள்.

- Advertisement -

இந்நிலையில் அண்ணாத்த படத்தை போய் திருமகள் சீரியல் என்று கலாய்த்து வீடியோ வெளியிட்டுள்ளனர் மீம்ஸ் கிரியேட்டர்கள். அந்த வீடியோவை தான் ரஜினி ரசிகர்களை பார்க்க வேண்டாம் என்கிறோம்.

தீபாவளி ரேஸில் இருந்து சிம்புவின் மாநாடு படம் வெளியேறியது. இந்நிலையில் அண்ணாத்த படத்தை பார்த்து மாநாடு குழுவின் ரியாக்ஷன் என்று சிரிப்பாய் சிரிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

அண்ணாத்த கதையை கேட்டுவிட்டு தான் அஜித் சிவாவை கழற்றிவிட்டுவிட்டு வினோத் இயக்கத்தில் நடிக்கச் சென்றுவிட்டார் என்றும் கலாய்க்கிறார்கள்.

கலாய்ப்பவர்கள் கலாய்த்துக் கொண்டிருக்க அண்ணாத்த படமோ ரிலீஸான அன்று தமிழகத்தில் மட்டும் ரூ. 34.92 கோடி வசூல் செய்திருக்கிறது என்று தகவல் வெளியாகி ரஜினி ரசிகர்களை சந்தோஷப்பட வைத்திருக்கிறது.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

RELATED ARTICLES

Most Popular